மாமன்ற உறுப்பினர்களுக்கு கட்சி வாரியாக இருக்கை வழங்கப்படவில்லை

Jul 23, 2023 - 13:22
 141
மாமன்ற உறுப்பினர்களுக்கு கட்சி வாரியாக இருக்கை வழங்கப்படவில்லை

மாமன்ற உறுப்பினர்களுக்கு கட்சி வாரியாக இருக்கை வழங்கப்படவில்லை

தமிழகம் முழுவதும் உள்ள நகராட்சிகள் , மாநகராட்சிகளில் கட்சி ரீதியாக இருக்கை ஒதுக்கப்பட்ட நிலையில், திருச்சிராப்பள்ளி மாநகராட்சியில் நடக்கும் மாமன்ற கூட்டத்தில், இதுவரை மாமன்ற உறுப்பினர்களுக்கு கட்சி வாரியாக இருக்கை வழங்கப்படவில்லை.

இதுகுறித்து திருச்சிராப்பள்ளி மாநகராட்சி மேயர் திரு அன்பழகன் அவர்களுக்கு, அம்மா மக்கள் முன்னேற்ற, திருச்சி மாநகர் கழக மாவட்ட செயலாளரும், மாமன்ற உறுப்பினருமான ப_செந்தில்நாதன் அவர்கள் கடிதம் அனுப்பி உள்ளார்.

இதில் "திருச்சி மாநகராட்சியில், 47-வது வார்டில் இருந்து அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள எனக்கு, இதுவரை மாமன்றத்தில் இருக்கை ஒதுக்கீடு செய்யப்படவில்லை

மாநகராட்சி தேர்தல் முடிந்து ஓராண்டுகள் ஆகியும் இன்னும் கட்சி வாரியாக இருக்கை ஒதுக்காததால், மாமன்ற உறுப்பினர்கள் கிடைக்கும் இடத்தில் உட்கார்ந்து கொண்டு செயல்படுவது நமது மாமன்றத்தின் மாண்பை குறைக்கும் வகையில் உள்ளது.

எனவே வரும் ஜூலை மாத கூட்டத்திற்குள், அரசியல் கட்சி பிரதிநிதித்துவ அடிப்படையில் இருக்கை ஒதுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்." என்று தெரிவித்துள்ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow