வன்னியர் சமுதாய மக்களுக்கான வரன் பார்க்கும் விழா
வன்னியர் நல அறக்கட்டளை மற்றும் டி என் சி திருமணத் தகவல் மையம் ஆகியவை இணைந்து நடத்திய வன்னியர் சமுதாய மக்களுக்கான
வரன் பார்க்கும் விழா
வன்னியர் நல அறக்கட்டளை மற்றும் டி என் சி திருமணத் தகவல் மையம் ஆகியவை இணைந்து நடத்திய வன்னியர் சமுதாய மக்களுக்கான வரன் பார்க்கும் விழா சேலத்தில் தனியார் மண்டபத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் இளங்கோவன் டி என் சி சேர்மன் தலைமை தாங்கினார், கார்த்திக் முன்னிலை வகித்தார், போஜாராஜா வர்மா வரவேற்புரையாற்றினர். கௌரவ சிறப்பு அழைப்பாளர் ராஜேந்திரன் சேலம் வடக்கு மாவட்ட திமுக செயலாளர், அன்பழகன் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் வன்னியர் நல அறக்கட்டளை சங்க நிர்வாகிகள் சிவலிங்கம், பழனிச்சாமி, பனங்காட்டார், பழனிசாமி, ரத்தினம், முத்துலிங்கம், பாலசுப்ரமணியன், இளங்கோ, எஸ் கே ரத்தினவேல் மற்றும் பலர் கலந்து கொண்டனர் இதில் 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் கலந்து கொண்டு தங்களது மகன் மகளுக்கு வரம் தேடினர்.
What's Your Reaction?



