சேலம் மாவட்ட 24 மனை தெலுங்கு செட்டியார்கள் நல சங்கம் சார்பாக மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு 

Jan 22, 2025 - 08:50
 8
சேலம் மாவட்ட 24 மனை தெலுங்கு செட்டியார்கள் நல சங்கம் சார்பாக மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு 

சேலம் மாவட்ட 24 மனை தெலுங்கு செட்டியார்கள் நல சங்கம் சார்பாக மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு 

சேலம் மாவட்ட 24 மனை தெலுங்கு செட்டியார் நல சங்கத்தின் சார்பாக தலைவர் டி. மாதேசன், செயலாளர் வி. ராஜவடிவேலு, பொருளாளர் ஜி.சித்தன் செட்டியார், சங்க உறுப்பினர்கள் மாவட்ட ஆட்சியரை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.

அளிக்கப்பட்ட மனுவில் தங்கள் சமூகத்தின் உட்பிரிவுகளின் ஒன்றான தெலுங்குபட்டி செட்டி இனத்தை மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியில் சேர்த்து அறிவிக்கும் போது விடுபட்டு போன தங்கள் சமூகத்தின் உட்பிரிவுகளான சாதுசெட்டி,தெலுங்கு செட்டி,24 மனை தெலுங்குசெட்டி ஆகிய அனைத்தையும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியல் சேர்த்து அறிவிக்க வேண்டியும், அரசு தொடர்பான விஷயங்களில் தங்கள் 24 மனை தெலுங்கு செட்டியார் சமூகத்தினரை அவரவர் வாழும் இடம் மற்றும் தொழில் முறைகளைக் கொண்டு 24மனை தெலுங்குசெட்டி ,சாதுசெட்டி,தெலுங்குபட்டி செட்டி தெலுங்குசெட்டி என்ற நான்கு உட்பிரிகளோடு குறிக்கப்பட்டுள்ளதாகவும்,எனவே நான்கு உட்பிரிவுகளை கொண்ட தாங்கள் அனைவரும் 24 மனை தெலுங்கு செட்டியார் என்ற ஒரே இனத்தை சேர்ந்தவர்கள் என்றும், தமிழகத்தில் தங்கள் சமுதாய மக்கள் தலைசுமையாக ஜவுளி,பாத்திரம் மற்றும் வெள்ளை பூண்டு போன்ற பொருட்களை வியாபாரம் செய்தும் தெருவோரம் சாக்கு தைத்தும் கிராமசந்தை மற்றும் திருவிழாக்களில் பாசி மணி,பொட்டு போன்ற பொருட்களை விற்பனை செய்தும் ஜீவனம் நடத்துகிறார்கள்,எனவே மேற்கண்ட எளிய வருவாய் உள்ள தொழில்களால் தங்களது சமூக மக்களின் வாழ்க்கைத் தரம் மிகவும் பின்தங்கி உள்ளதாகவும், தங்கள் சமூக மக்களின் வாரிசுகள் மருத்துவம், பொறியியல் போன்ற உயர்கல்வி பயிலும் வாய்ப்பு கிடைக்காமல் போகிறது என்றும் அரசு சார்ந்த உயர் பதவி தங்கள் சமூகத்தினர் விரல்விட்டு எண்ணக்கூடிய அளவிலேயே உள்ளனர் என்றும், எனவே 24 மனை தெலுங்கு செட்டியார்கள் என்ற பிரதான பெயரில் ஒற்றுமையாக வசித்து வரும் தங்கள் சமுதாயத்திற்கு கலங்கரை விளக்கமாய் திகழும் தாங்கள் விடுபட்டுப் போன மூன்று உட்பிரிகளையும் சேர்த்து மிகவும் பிற்படுத்தப்பட்டியலில் சேர்த்து ஆணை வெளியிட வேண்டி தங்களது புகார் மனுவில் தெரிவித்திருந்தனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow