திருச்சி என்.ஆர். ஐ.ஏ.எஸ். அகாடமியில் 45-வது வெற்றி விழா - மாணவர்கள், பெற்றோருக்கு பாராட்டு

Nov 18, 2024 - 11:24
 12
திருச்சி என்.ஆர்.  ஐ.ஏ.எஸ். அகாடமியில்  45-வது வெற்றி விழா -  மாணவர்கள், பெற்றோருக்கு பாராட்டு
திருச்சி என்.ஆர்.  ஐ.ஏ.எஸ். அகாடமியில்  45-வது வெற்றி விழா -  மாணவர்கள், பெற்றோருக்கு பாராட்டு

திருச்சி என்.ஆர். ஐ.ஏ.எஸ். அகாடமியில் 45-வது வெற்றி விழா - மாணவர்கள், பெற்றோருக்கு பாராட்டு. திருச்சி ராம்ஜி நகர் கே.கள்ளிக்குடியில் அமைந்துள்ள என்.ஆர். ஐ.ஏ.எஸ். அகாடமியில் யு.பி.எஸ்.சி, டி.என்.பி.எஸ்.சி மற்றும் மத்திய மாநில அரசுகள் நடத்தும் அனைத்து தேர்வுகளுக்கும் சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த அகாடமி கடந்த 21 ஆண்டுகளில் 24 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசு அதிகாரிகள் மற்றும் அலுவலர்களை உருவாக்கியுள்ளது. சமீபத்தில் வெளியான டிஎன்பிஎஸ்சி தேர்வு முடிவுகளிலும் என்.ஆர் ஐ.ஏ.எஸ். அகாடமி மாணவர்கள் மாநில அளவில் சாதனை படைத்து உள்ளனர். இந்த அகாடமியின் 45 வது வெற்றி விழா நேற்று என் ஆர் அகாடமி அரங்கில் நடைபெற்றது. விழாவுக்கு அகாடமி தலைவர் ஆர். விஜயாலயன் தலைமை தாங்கி சிறப்புரையாற்றினார். தொடர்ந்து பல்வேறு போட்டி தேர்வுகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கும், அவர்களின் பெற்றோருக்கும் பாராட்டு விழா நடைபெற்றது. விழாவில் கல்வியாளர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow