சபரிமலை மகர மண்டல விழாக்காலம் வரும் 16 11 24 முதல் துவங்க உள்ளது
சபரிமலை மகர மண்டல விழாக்காலம் வரும் 16 11 24 முதல் துவங்க உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் இந்த விழாக்காலத்தில் ஒவ்வொரு ஆண்டும் அகில பாரத ஐயப்ப சேவா சங்கம் திருச்சி மாவட்ட யூனியன் சார்பாக ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் சாலையில் உள்ள KKS மாமுண்டி கோனார் தோப்பில் கார்த்திகை ஒன்று முதல் 60 நாட்கள் தொடர் அன்னதானம் மற்றும் சமயபுரத்தில் டிசம்பர் 31 முதல் ஜனவரி 15 வரை அன்னதானம் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் அன்னதானம் கடந்த 15 ஆண்டுகளாக நடைபெற்று கொண்டு வருகிறது. விழாக்கால சிறப்பு முகாமிற்கு பந்தல் அமைக்க முகூர்த்த கால் நடும் நிகழ்வு இன்று 08 11 24 நடைபெற்றது.
இந்த முகாம் வருகிற கார்த்திகை ஒன்று 16 11 2024 காலை 8 மணி அளவில் துவங்க உள்ளது.இன்றைய நிகழ்வில் மாவட்ட புரவலர் திரு எம் வி முரளி அவர்கள் மாவட்ட தலைவர் திரு என் ரமேஷ், கௌரவத் தலைவர் திரு எம் வி சபரி தாசன் செயலாளர் திரு ஸ்ரீதர் பொருளாளர் திரு சுரேஷ் அலுவலக செயலாளர் திரு. அம்சராம் துணைத் தலைவர்கள் திரு முத்து இணைச் செயலாளர்கள் திரு இளங்கோ திரு சிதம்பரம், திரு ராதாகிருஷ்ணன், மற்றும் அகில பாரத ஐயப்ப சேவா சங்கத்தை சார்ந்த மாவட்ட நிர்வாகிகளும் பல்வேறு கிளை நிர்வாகிகளும் உறுப்பினர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
What's Your Reaction?