கொலைகாரர்கள் கொள்ளையர்கள் என இழிவுபடுத்த பேசிய யூடியூபரை கைது செய்ய வலியுறுத்தி சமயபுரம் அருகே குறிஞ்சி நில மக்கள் ஆர்ப்பாட்டம்
கொலைகாரர்கள், கொள்ளையர்கள் என இழிவுபடுத்த பேசிய யூடியூபரை கைது செய்ய வலியுறுத்தி சமயபுரம் அருகே குறிஞ்சி நில மக்கள் ஆர்ப்பாட்டம்
சமயபுரம் நால்ரோடு பகுதியில் குறிஞ்சி நில மக்களை கொலைகாரர்கள், கொள்ளைக்காரர்கள் என பிரபல யூடியூபர் பாண்டியன் இழிவு படுத்திப் பேசித்தை கண்டித்து சுமார் 50 க்கும் மேற்பட்ட குறிஞ்சி நில மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு அறம் நாடு என்ற யூடியூப் சேனலில் குற்ற சாதி என்ற தலைப்பில் பிரபல யூடியூபர் மற்றும் முன்னாள் பத்திரிகையாளரான பாண்டியன் என்பவர் ஒட்டு மொத்த குறவர் சமுதாயமும் கொலைகாரர்கள் எனவும் கொள்ளைக்காரர்கள் என இழிவு படுத்திப் பேசி உள்ளார். இதனை கண்டித்து குறிஞ்சி நில மக்கள் கழகம் சார்பில் சமயபுரம் நாலு ரோட்டில் மாநில ஒருங்கிணைப்பாளர் தங்கராஜ் தலைமையில் சுமார் 15திற்கும் மேற்பட்ட பெண் உள்பட 50க்கும் மேற்பட்டோர் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட குறிஞ்சி நில மக்களை சேர்ந்த இளம் பட்டதாரி மாணவி கூறுகையில்:-
நாங்கள் பிறப்பில் காடு,மலை என இயற்கை சார்ந்த பகுதியை நேசிக்கும் மக்கள். நாங்கள். எங்களுடைய மூதாதையர் வழிகளை பின்பற்றி எவருக்கும் தீங்கு இளைக்காமல் வருகிறோம். மேலும் தற்போது எங்களுக்கும் தமிழக அரசு முன்னுரிமை வழங்கி வருவதால் தான் நான் இன்று பட்டதாரி ஆகி நிற்கிறேன். எங்கள் குறிஞ்சி நில மக்கள் ஒவ்வொரு அடி எடுத்து மேலே வருகிறோம். ஆனால் பிரபல யூடியூபரான பாண்டியன் ஒட்டு மொத்த குறவர் சமுதாயமும் கொலைகாரர்கள் எனவும் கொள்ளைக்காரர்கள் எனவும் இழிவு படுத்திப் எங்களை பேசி வருகிறார். அதை கண்டிக்கும் வகையில் அவரை கைது செய்ய வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடத்தி வருகிறோம் என தெரிவித்தார்.
இதையடுத்து குறிஞ்சி நில மக்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் பிரபல யூடியூபர் மற்றும் முன்னாள் பத்திரிகையாளரான பாண்டியனை கைது செய்ய வேண்டும் என பதாகைகள் வைத்துக்கொண்டு கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
What's Your Reaction?