மின் கட்டண உயர்வை கண்டித்து திருச்சியில் அமமுக  ஆர்ப்பாட்டம்

Jul 22, 2024 - 21:35
 18

மின் கட்டண உயர்வை கண்டித்து திருச்சியில் அமமுக  ஆர்ப்பாட்டம் கலெக்டர் அலுவலகம் முன்பு நடத்தினர்

தமிழகத்தில் மின் கட்டண உயர்வு மற்றும் அனைத்து வரிகளையும் உயர்த்திய திமுக அரசின் மக்கள் விரோத போக்கை கண்டித்து,
ஒருங்கிணைந்த திருச்சி மாவட்ட அ.ம.மு.க. சார்பாக, இன்று,  திருச்சி மாவட்டகலெக்டர் அலுவலகம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்குதிருச்சி மாநகர் மாவட்ட அவைத்தலைவர் சாத்தனூர் ராமலிங்கம் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் தலைமை நிலைய செயலாளர், திருச்சி புறநகர் வடக்கு மாவட்டச் செயலாளர் ராஜசேகரன்,
திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் செந்தில்நாதன்,
திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர்  கலைச்செல்வன், ஆகியோர் முன்னிலை வகித்தார்கள். ஆர்ப்பாட்டத்தில், நிர்வாகிகள்  தன்சிங், முதலியார் சத்திரம் ராமமூர்த்தி,டோல்கேட் கதிரவன்,
,நாகநாதர் சிவகுமார், கல்நாயக் சதீஷ் கம்ருதீன், லதா, பெஸ்ட்பாபு,வேதாத்திரி நகர் பாலு, இளையராஜா, உமாபதி, மதியழகன், சண்முகம், இளங் கோவன், குப்புசாமி, தண்ட பாணி, சாந்தா, ஜான் கென்னடி நாகூர் மீரான்,சக்திவேல், நல்லம்மாள்,சாந்தா, கோமதி மங்கை. தருண், கருணாநிதி, கைலாஷ், முகமது ஆரிஸ், லோக்நாத். பைசல்,கல்லணை குணா,உறையூர் சாமிநாதன் பழனிச்சாமி,நெல்லை லட்சுமணன் உள்ளிட்ட நிர்வாகிகள், தொண்டர்கள்,திரளாக கலந்து கொண்டனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow