அனைத்து மக்கள் அரசியல் கட்சியின் மத்திய மற்றும் தென் மண்டல நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டம் திருச்சியில் நடைபெற்று
அனைத்து மக்கள் அரசியல் கட்சியின் மத்திய மற்றும் தென் மண்டல நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டம் திருச்சியில் நடைபெற்று
திருச்சி மத்திய நிலையம் அருகில் உள்ள தனியார் ஓட்டலில் அனைத்து மக்கள் அரசியல் கட்சியின் மத்திய மற்றும் தென் மண்டல நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டம் நிறுவனத் தலைவர் புரட்சி தமிழ்ச்சி மூ.ராஜேஸ்வரி பிரியா தலைமையில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு திருச்சி மண்டல பொறுப்பாளர் S.M.முகம்மது காசிம்,மாநிலத் துணை பொது செயலாளர் வெள்ளைச்சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாநில பொது செயலாளர் வீணா, மாநில பொருளாளர் மரிய விஜய் ஆனந்த்,மாநில கொள்கை பரப்பு செயலாளர் செல்வசேகர், மாநில வழக்கறிஞர் பிரிவுச் செயலாளர் விஜய கார்த்திகேயன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
மாநில கொள்கை பரப்பு துணைச் செயலாளர்.காசிநாததுரை,
மதுரை மாவட்ட செயலாளர் இராஜேஷ், நாகப்பட்டினம் மாவட்ட செயலாளர் சினேகா, கன்னியாகுமரி மாவட்ட செயலாளர் சதீஸ்குமார்,
விருதுநகர் மாவட்ட செயலாளர்.ஆனந்தராஜ்,தேனி மாவட்ட செயலாளர் பார்த்தீபன், மயிலாடுதுறை மாவட்ட தலைவர் கார்த்திக், ஜோசப் தூத்துக்குடி மாவட்ட செயலாளர் ஹென்றி, திண்டுக்கல் மாவட்ட செயலரளர் இராஜபாண்டி, மற்றும் மத்திய, தென் மாவட்ட, நகர, ஒன்றிய, கிளை பொறுப்பாளர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
பின்னர் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் நிறுவனத் தலைவர் ராஜேஸ்வரி பிரியா கூறும் போது :-
வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுடம் கூட்டணி வைத்து போட்டியிட உள்ளோம். எங்கள் கட்சிக்கு எத்தனை சீட்டுகள் என்பது குறித்து அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி உடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. பேச்சுவார்த்தை முடிஞ்ச பின்பு அது குறித்து அறிவிப்போம். தற்போது தமிழக முழுவதும் அதிமுகவுக்கு ஆதரவாக களப்பணியாற்ற தொடங்கிவிட்டோம். வரும் சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கண்டிப்பாக வெற்றி பெறும் என தெரிவித்தார்.
What's Your Reaction?



