திருச்சியில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மாட்டு வண்டி ஓட்டி அதிமுக வேட்பாளர் கருப்பையாவுக்கு வாக்கு சேகரிப்பு
திருச்சியில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், மாட்டு வண்டி ஓட்டி அதிமுக வேட்பாளர் கருப்பையாவுக்கு வாக்கு சேகரிப்பு.
அதிமுக திருச்சி மாநகர் மாவட்ட கழகம் சார்பில், மாநகர் மாவட்ட கழக செயலாளர் முன்னாள் துணை மேயர் சீனிவாசன் தலைமையில்,
திருச்சி கிழக்கு, திருச்சி மேற்கு ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்குட்பட்ட, கருமண்டபம், ராம்ஜி நகர், கிராப்பட்டி, உடையான் பட்டி, காமராஜர் நகர் உள்ளிட்ட 133 இடங்களில் திருச்சி நாடாளுமன்ற வெற்றி வேட்பாளர் கருப்பையா தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
முன்னதாக கருமண்டபம் பகுதியில் உள்ள இளங்காட்டு மாரியம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு நடத்தி பிரச்சாரத்தை துவக்கினார்.
அதனைத் தொடர்ந்து அதிமுகவினர் புடை சூழ வீதி, வீதியாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
அப்போது இரட்டை மாடுகள் பூட்டிய மாட்டு வண்டியை , புதுக்கோட்டை மாவட்ட செயலாளர் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் ஒட்டி வர, அதில் அமர்ந்திருந்த அதிமுக திருச்சி நாடாளுமன்ற வெற்றி வேட்பாளர் கருப்பையா இரு கரம் கூப்பி வாக்காளர்களிடம் இரட்டை இலைக்கு வாக்குகளை சேகரித்தார்.
அதிமுக வெற்றி வேட்பாளர் கருப்பையாவுக்கு பெண்கள் நீண்ட வரிசையில் நின்று கும்ப மரியாதையுடன் வரவேற்பளித்தனர்.
இதில், புதுக்கோட்டை மாவட்ட கழக செயலாளர் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், திருச்சி மாநகர் மாவட்ட கழக செயலாளர் சீனிவாசன், கழக அமைப்பு செயலாளர்கள் ரத்தினவேல், வளர்மதி, மாவட்ட துணை செயலாளர் கருமண்டபம் பத்மநாதன், வணக்கம் சோமு , அதிமுக பகுதி கழக செயலாளர்கள், மகளிர் அணியினர், தேமுதிக, எஸ்டிபிஐ, புதிய தமிழகம் உள்ளிட்ட தோழமைக் கட்சிகளின் நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
கருமண்டபம் முதல் ஆர் எம் எஸ் காலனி ,சக்தி நகர் , ராம்ஜிநகர், பிராட்டியூர், பொன் நகர் , சின்ன மிளகுபாறை பெரிய மிளகுபாறை போன்ற பகுதிகளில் திரளான தொண்டர்களை திரட்டி உற்சாக வரவேற்பு அளித்தார் டிபன் கடை கார்த்திகேயன். அவருடைய இந்த செயலை பலரும் பாரட்டினர்.
What's Your Reaction?