திருச்சி பாராளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் கருப்பையா ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் பொதுமக்களிடம் வாக்கு கேட்டு தீவிர பிரச்சாரம்

Apr 10, 2024 - 17:25
 27
திருச்சி பாராளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் கருப்பையா ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் பொதுமக்களிடம் வாக்கு கேட்டு தீவிர பிரச்சாரம்

திருச்சி பாராளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் கருப்பையா  திருச்சி பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு இடங்களில் பொதுமக்களிடம் இரட்டை இலை  சின்னத்தில் வாக்கு கேட்டு தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

அதிமுக வேட்பாளர் கருப்பையா இன்று ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட இரட்டை வாய்க்கால், சோமபரசம்பேட்டை, வயலூர், எட்டரை, அல்லித்துறை, வயலூர், குழுமணி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பொதுமக்களிடம் வாக்கு கேட்டு தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இந்தப் பிரச்சாரத்தின் போது முன்னாள் அமைச்சர்கள் பரஞ்சோதி, எஸ்.வளர்மதி முன்னாள் எம்பி குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு பொதுமக்களிடம் வாக்கு கேட்டு பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.

 இந்த பிரச்சாரத்தில் அதிமுக வேட்பாளர் கருப்பையா அல்லித்துறை பகுதியில் செல்லும் பொழுது 100க்கும் மேற்பட்ட பெண்கள் வழி நெடுகிலும் நின்று ஆரத்தி எடுத்து உற்சாகமாக வரவேற்றனர்.

மேலும் பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்ய வேண்டும் என அதிமுக வேட்பாளர் கருப்பையா  கேட்டுக்கொண்டார்.

இந்தப் பிரச்சாரத்தின் போது  தேமுதிக, எஸ்டிபிஐ, புதிய தமிழகம் கட்சி உள்ளிட்ட கூட்டணி கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் தொண்டர்கள் இருசக்கர வாகன பேரணியாக கலந்து கொண்டு பொதுமக்களிடம் வாக்கு கேட்டு பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow