திருச்சி காந்தி மார்க்கெட் நெல் பேட்டை கோட்டை கிருஷ்ணன் கோவில் மகா கும்பாபிஷேக விழா
திரளான பக்தர்கள் சாமி தரிசனம்
திருச்சி பாலக்கரை யாதவர் தெரு ஸ்ரீ நவநீத கிருஷ்ணவாமி ஸ்ரீ துர்க்கை அம்மன் கோவில் வகையறா தேவஸ்தானத்தின் திருச்சி காந்தி மார்க்கெட் நெல்பேட்டையில் வீற்றிருக்கும் கோட்டை ஸ்ரீ கிருஷ்ணன் கோவில் ஜீர்ணோத்த்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா
கடந்தசனிக்கிழமை காலை 7 மணிக்கு தொடங்கியது.
அதைத் தொடர்ந்து பக்தர்கள் சமஸ்கிரான் தெரு சப்பாணி கோவிலில் இருந்து தீர்த்த குடம் எடுத்து வந்தனர். அதைத் தொடர்ந்து கிருஷ்ணருக்கு மகா சுதர்சன ஹோமம் நடந்தது .அதன் பின்னர் மாலை 6 மணிக்கு முதற்கால பூஜையும், நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரண்டாம் கால பூஜை மற்றும் மாலை 4 மணிக்கு அனைத்து சுவாமி விக்கிரகங்களுக்கும் மகா அபிஷேகம் நடைபெற்றது. அதன் பின்னர் மாலை 6 மணிக்கு மூன்றாம் கால பூஜை நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்வான மகா கும்பாபிஷேக விழா இன்று (திங்கட்கிழமை)நடந்தது.முன்னதாக காலை 6 மணிக்கு நான்காம் கால பூஜையுடன் பூர்ணாஹீதி, மகா தீபாராதனை நடைபெற்றது. அதன் பின்னர் சிவாச்சாரியார்கள் கும்பாபிஷேகத்தை புனித நீரூற்றி நடத்தி வைத்தனர். இந்த கும்பாபிஷேக விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
இதற்கான ஏற்பாடுகளை விழாக் குழுவினர் மற்றும் டிரஸ்டிகள் சேதுராமன், சீனிவாசன்,கோபாலகிருஷ்ணன், பார்த்திபன், வெங்கடேசன், கருணாநிதி ஆகியோர் செய்திருந்தனர்.
படவரி :
திருச்சி காந்தி மார்க்கெட் நெல் பேட்டையில் இன்று
கோட்டை கிருஷ்ணன் கோவில் மகா கும்பாபிஷேகம் நடந்த போது எடுத்த படம்.
இதில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
What's Your Reaction?