சட்டக் கல்லூரியில் விளையாட்டு போட்டி

Mar 3, 2023 - 10:26
 9
சட்டக் கல்லூரியில் விளையாட்டு போட்டி

சேலம் சென்ட்ரல் சட்டக் கல்லூரியில் விளையாட்டு போட்டிகளுக்கான துவக்க விழா சேலம்:மார்ச்.3 சேலம் சென்ட்ரல் சட்டக்கல்லூரியில் விளையாட்டு போட்டிகள் துவக்க விழா கல்லூரியின் அரங்கத்தில் தொடங்கியது. இப்போட்டிகள் 02-03-2023 முதல் தொடங்கி 15-03-2023 வரை பத்து நாட்கள் வரை நடைபெறுகிறது. இவ்விழாவில் சேலம் அம்மாபேட்டை காவல் உதவி ஆணையர் கே.சரவணகுமரன் அவர்கள் சிறப்பு விருந்தினராக பங்கேற்று அவரின் உரையில் தனக்கு பிடித்தமான சில வரிகளை கூறி “யாதும் ஊரே யாவரும் கேளீர்”,வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன், மாற்றம் ஒன்றுதான் மாறாதது என்றும் அதனால் சட்டத்தை அதிகம் படிக்கவேண்டும் என்றும், அதிகம் கற்றவர்கள் ஆராய்ந்து செயல்படுவார்கள் என்றும் மாணவர்களாகிய நீங்கள் படிப்பில் சிறந்து விளங்குவதோடு மட்டுமில்லாமல் எதற்கும் எதிர்மறையாக நடந்துகொள்ளாமல் அதற்கான நேர்மறை எண்ணங்களோடு செயல்படவேண்டும். காவல்துறையும் வழக்கறிஞர் தொழிலும் ஒன்றோடு ஓன்று இணைந்தது ஆகும்.ஆதலால் நாம் உண்மைக்காக போராடி கீழ்தட்டு மக்களுக்காகவும் நீதி கிடைக்க செயல்படவேண்டும். விளையாட்டு போட்டிகளில் பங்கேற்க வேண்டியதின் அவசியம் பற்றியும் அவ்வாறு விளையாட்டுபோட்டிகளில் பங்கேற்கும்போது உடலில் சோம்பேறித்தனம் இன்றி அவர்களது படிப்பு அறிவும் மிகவும் மேம்படும் என்று கூறி இதனால் மாணவர்களுக்கு விளையாட்டு ஒதுக்கீடுகளின் அடிப்படையில் எளிதாக கல்வியும் வேலைவாய்ப்பும் கிடைக்க வாய்ப்பு உண்டு என்று கூறினார்.விளையாட்டால் உடலில் நோய்கள் ஏற்படாமல் தடுக்கவும் முடியும் என்றும் சிறப்புரையாற்றினார். முன்னதாக கல்லூரியின் உடற்கல்வி இயக்கனர் ம.வெங்கடேஷ் அவர்கள் வரவேற்புரை ஆற்றினார். இறுதியாக கல்லூரியின் உடற்கல்வி இயக்குநர் ம.சங்கர் அவர்கள் நன்றி உரை ஆற்றினார். இதற்கான விரிவான ஏற்பாடுகளை சேலம் சட்டக் கல்லூரியின் தலைவர் த.சரவணம் அவர்களும், முதல்வர் பேராசிரியர் பேகம் பாத்திமா அவர்களும் கல்லூரியின் முதன்மை நிர்வாக அதிகாரி மாணிக்கம் அவர்களும் செய்திருந்தனர்.முன்னதாக இப்போட்டிக்கான ஒருங்கிணைப்பை கல்லூரியின் உடற்கல்வி இயக்குநர்கள் ம.சங்கர் மற்றும் ம.வெங்கடேஷ் அவர்கள் செய்திருந்தனர்கள்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow