ஜோயாலுக்காஸ், சேலம் ஷோரூமின் மறுதிறப்பு விழா
ஜோயாலுக்காஸ், சேலம் ஷோரூமின் மறுதிறப்பு விழா
ஜோயாலுக்காஸ் குரூப், தனது வாடிக்கையாளர்களுக்கு புத்தூணர்வூட்டும், மிகச் சிறப்பான ஆப்ஷனை வழங்கும் விதமாக, ஓப்லி கோல்டன் டவர், ஓமலூர் மெயின் ரோடில், தனது மறுவடிவமைக்கப்பட்ட சேலம் ஷோரூமின் மறு திறப்பு விழாவை நடத்தியது. ஜோயாலுக்காஸ் எப்போதுமே, அது அவர்களின் புதிய ஷோரூமாக இருந்தாலும் சரி, அவர்களின் அற்புதமான டிஸைன்களாக இருந்தாலும் சரி. தனது வாடிக்கையாளர்களுக்கு புதுமைப் படைப்புகளை தொடர்ந்து வழங்கி அவர்களுக்கு புதிய அனுபவத்தை உருவாக்கித் தருகிறது. ரீடெய்லில் அவர்கள் புகுத்தும் புத்தம் புது ஐடியாக்கள், ஜுவல்லரி ஷாப்பிங்கில் சர்வதேச டிரெண்டுகளுக்கு இணையான அனுபவத்தை அளிக்கிறது, ஜோயாலுக்காஸின் புதிய சேலம் ஷோரூமிலும் இந்த தூண்டுதலே பிரதிபலிக்கிறது. முற்றிலுமாக புதிய தோற்றத்தைப் பெற்று பொலிவுடன் இருக்கும் இந்த ஷோரூம் எப்போதும் இல்லாத விதமாக பெருகிக் கொண்டேயிருக்கும் புதியதோர் அனுபவத்தை வழங்கும்.
இந்த நிகழ்வையொட்டி திரு. ஜாய் அலூக்காஸ், சேர்மேன் அண்ட் மேனேஜிங் டைரக்டர், ஜோயாலுக்காஸ் குரூப் பேசும்போது, “இன்று நாங்கள் இந்த அளவுக்கு பிரமாண்டமாக வளர்ந்து பேரும் புகழும் பெற்றுள்ளோம் என்றால், அதற்குக் காரணம், மாறி வரும் காலத்திற்கு ஏற்ப அதில் தொடர்ந்து முதலீடு செய்து, உலகமே ஆளும் டிரெண்டின் அதே போக்கில் நாங்களும் அடியெடுத்து வைக்கிறோம் என்பதேயாகும். ரீடெய்ல் ஸ்பேஸ்கள், தீவிரமான மாற்றங்களுக்கு உள்ளாகியிருக்கின்றன அதற்கு ஜுவல்லரி பிஸ்னஸ் விலக்கல்ல. ஜோயாலக்காஸில் நாங்கள் எதிர்பார்ப்புகளை முன் வைத்து அவற்றை வெறுமனே பின்பற்றாமல், புதிய டிரெண்டுகளை உருவாக்குகிறோம். எங்கள் சேலம் ஷோரூமின் புதிய கண்கவர் புதிய அவதாரம், எங்களின் இந்த உயரிய சித்தாந்தத்தை பிரதிபலிக்கும் விதமாக அமைந்திருக்கிறது“ என்று கூறினார்.
ஜோயாலுக்காஸ் இப்போது 11 நாடுகளில், 160 ஷோரூம்களுடன் இயங்கி வருகிறது. அவை ஒவ்வொன்றும் படைப்பாற்றல், அதிஉன்னத தன்மை மற்றும் அர்ப்பணிப்பின் கவிதையாய், கம்பீரமாய் உயர்ந்தோங்கி நிற்கின்றன.
What's Your Reaction?