அகில பாரத ஐயப்ப சேவா சங்கம் திருச்சி மாவட்ட யூனியனின் தொண்டர் பாராட்டு விழா

Jul 28, 2024 - 18:20
 99
அகில பாரத ஐயப்ப சேவா சங்கம் திருச்சி மாவட்ட யூனியனின் தொண்டர் பாராட்டு விழா

அகில பாரத ஐயப்ப சேவா சங்கம் திருச்சி மாவட்ட யூனியனின் தொண்டர் பாராட்டு விழா மற்றும் பொதுக்குழு கூட்டமும் இன்று 27 7 24 ஆம் ஆண்டு திருச்சி அன்னதான சமாஜத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட தலைவர் N ரமேஷ் தலைமை வகித்தார். மாவட்ட புரவலர் திரு என் வி முரளி அவர்கள் முன்னிலை வகிக்க குணசீலம் ஸ்ரீ வெங்கடாசலபதி திருக்கோவில் பரம்பரை டிரஸ்டி திரு பிச்சுமணி ஐயங்கார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். மாவட்ட செயலாளர் திரு ஸ்ரீதர் சிறப்புரை ஆற்றினார். சபரிமலையில் விழாக்காலத்தில் தொண்டு செய்த 156 தொண்டர்களுக்கும், திருச்சி மாவட்டத்தில் உள்ள பல்வேறு திருக்கோயில்களில் சேவை செய்த தொடர்களுக்கும், விழா காலத்தில் ஸ்ரீரங்கம் அன்னதான முகாமில் 60 நாட்கள் பணிபுரிந்த தொண்டர்களுக்கும், சமயபுரம் அன்னதான முகாமில் சேவை செய்த தொண்டர்களுக்கும் திருச்சி மாவட்டத்தில் உள்ள 100 கிளைகளுக்கும், திருச்சி மாவட்ட நிர்வாகிகளுக்கும் நினைவு பரிசும் கேடயமும் வழங்கப்பட்டது. பின்னர் நடைபெற்ற பொதுக்குழுவில் திரு ரமேஷ் திரு ஸ்ரீதர் திரு சுரேஷ் ஆகியோர் முறையே தலைவர், செயலாளர், பொருளாளராக தேர்ந்தெடுக்கப்பட்டனர். திரு ரமேஷ் என்கிற முத்து, நடராஜன், திரு ராஜகோபால், திரு பாலசுப்பிரமணியன், திரு பாண்டியன் ஆகியோர் துணைத் தலைவர்களாகவும், திரு சிதம்பரம், திரு இளங்கோவன், திரு தர்மலிங்கம், திரு ராதாகிருஷ்ணன், திரு ஆசைத்தம்பி ஆகியோர் இணைச் செயலாளராகவும் திரு அம்சராம் உதவி பொருளாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். சென்னை சார்ந்த வழக்கறிஞர்கள் திரு சாய்ராம், திரு ..... தேர்தல் அதிகாரிகளாக பணிபுரிந்து இந்த பொதுக்குழுவை சிறப்பாக நடத்தி வைத்தனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow