சேலம் மாவட்ட லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் 76 ஆம் ஆண்டு மகாசபை கூட்டம்
சேலம் மாவட்ட லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் 76 ஆம் ஆண்டு மகாசபை கூட்டம்
சேலம் மாவட்ட லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் 76 வது வருடாந்திர மகா சபை கூட்டம் மற்றும் 2024&2027 ஆண்டிற்கான புதிய சங்க நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா சங்கத்தின் தலைவர் தனராஜ் தலைமையில் ஆர்.வி.கே.மஹால் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக பொதுச் செயலாளர் சண்முகப்பா கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். கூட்டத்திற்கு சங்க செயலாளர் பி.குமார் முன்னிலை வகித்தார். சங்கத்தின் உதவி தலைவர் எஸ். குமார், கூட்டத்திற்கு வருகை தந்த அனைவரையும் வரவேற்புரையாற்றினார்.அதன் பின் சங்கச் செயலாளர் பி.குமார் 2023&24 ஆம் ஆண்டுக்கான சங்க ஆண்டு அறிக்கையை வாசித்தார். சங்கத்தின் வரவு செலவு கணக்குகளை மகாசபையில் சமர்ப்பித்தார். அதனை சங்க உறுப்பினர்கள் அனைவரும் ஏக மனதாக அங்கீகாரம் செய்தனர். மேலும் கூட்டத்தில் 2023 மற்றும் 24 ஆம் ஆண்டு நடைபெற்ற சங்கத்தின் நிர்வாக குழு கூட்டங்களில் நிறைவேற்றப்பட்ட அனைத்து திருமணங்களையும் மகாசபை அங்கீகாரம் செய்து ஏற்றுக்கொள்கிறது போன்ற பல்வேறு விதமான தீர்மானங்களை நிறைவேற்றினர்.
What's Your Reaction?