தமிழ்நாடு அரசின் இன்னுயிர் காப்போம் திட்டத்தின் கீழ் இலவச விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவு மையத்தை அமைச்சர் திறந்து வைத்தார்!
தமிழ்நாடு அரசின் இன்னுயிர் காப்போம் திட்டத்தின் கீழ் இலவச விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவு மையத்தை அமைச்சர் திறந்து வைத்தார்!
சேலம் குறிஞ்சி மருத்துவமனையில், முதல்-அமைச்சரின் NK48 (நம்மை காக்கும் 48) இன்னுயிர் காப்போம் திட்டத்தின் கீழ் சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்காக சேலம் மாவட்டத்தில் முதல் முறையாக அவசரகால சிகிச்சை மையத்தை துவங்கியுள்ளது. இந்த அவசரகால சிகிச்சை மையம், முக்கியமாக சாலை விபத்து நடந்த முதல் 48 மணிநேரங்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு சரியான நேரத்தில் மற்றும் விரிவான கவனிப்பை வழங்குகிறது.தொடக்க விழாவில், மாண்புமிகு சுற்றுலாத் துறை அமைச்சர் ஆர். ராஜேந்திரன்,தலைமை விருந்தினராக கலந்து கொண்டார்.சேலம் மாநகராட்சி மேயர் ஏ.ராமச்சந்திரன் கௌரவ விருந்தினராக கலந்து கொண்டார்.குறிஞ்சி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையின் நிறுவனர் டாக்டர் டி.ஜெயராமன்,சமூகத்திற்கு சேவை செய்வதில் மருத்துவமனையின் நீண்டகால அர்ப்பணிப்பை எடுத்துரைத்தார். குறிஞ்சி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையின் நிர்வாக இயக்குனர் மணிமாறன் நன்றியுரை ஆற்றினார்.
What's Your Reaction?