வி.எஸ்.ஏ பொறியியல் கல்லூரியில் கலை விழா நடைபெற்றது
சேலம் விஎஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கலை விழா
சேலம் உத்தமசோழபுரம் பகுதியில் அமைந்துள்ள வி.எஸ்.ஏ பொறியியல் கல்லூரியில் கலை விழா நடைபெற்றது..சிறப்பு விருந்தினராக கல்லூரி தலைவர் டாக்டர் மலர்விழி ராஜா கலந்து கொண்டு குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் கல்லூரி கல்வி ஒளிபரப்பாளர் மேகலா வரவேற்புரை யாற்றினார். முதன்மை செயல் அலுவலர் ராஜேந்திரன் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். இதை ஒட்டி பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. பல்வேறு போட்டிகள், நடன போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் கல்லூரி நுண்கலை ஒருங்கிணைப்பாளர் ராமபிரபா, சத்யா, நுண்கலை மன்ற மாணவப் பிரதிநிதிகள் கலைவேந்தன், கவின், கௌதம் செய்திருந்தனர். இறுதியில் பிரியங்கா காந்தி நன்றியுரை ஆற்றினார்.
What's Your Reaction?