சேலத்தைச் சேர்ந்த மருத்துவமனை நிர்வாக இயக்குநருக்கு இரண்டு மலேசியா விருதுகள்
சேலத்தைச் சேர்ந்த மருத்துவமனை நிர்வாக இயக்குநருக்கு இரண்டு மலேசியா விருதுகள்
மலேசியா தலைநகர கோலாலம்பூரில் ஏப்ரல் 29 அன்று நடைபெற்ற மாயன் சர்வதேச விருதுகள் 2023 வழங்கும் விழாவில் சேலத்தை சேர்ந்த ஹைடெக் மற்றும் கேபிஆர் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைகளின் நிர்வாக இயக்குனர் என்.ஜெயபிரகாசுக்கு சிறந்த மருத்துவ சேவை வழங்கி அதற்கான மாயின் விருதுகள் வழங்கப்பட்டது. விழாவிற்கு மலேசியா மனிதவள அமைச்சர் சிவக்குமார் தலைமை தாங்கினார். குறைவான கட்டணததில் உயர்ந்த தரமான மருத்துவ சேவையை சேலம் மாவட்டத்தில் கிராமம் மற்றும் நரகத்தில் அனைத்து தரப்பு மக்களுக்கு வழங்கி வரும் ஐடெக் மற்றும் கேபிஆர் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைகளில் நிர்வாக இயக்குனர் ஜெயபிரகாஷின் சேவை பாராட்டி வழங்கப்பட்டிருக்கும் விருதுகள் மூலம் தமிழ்நாடு இந்தியாவும் பெருமை கொள்கிறது. மாயின் விருதுகள் பெற்றிருக்கும் என்.ஜெயபிரகாசுக்கு தொழிலதிபர்களும் மருத்துவமனை மருத்துவர்களும் பொது மேலாளர் ராஜேந்திரன் மற்றும் பணியாளர்களும் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
What's Your Reaction?