சேலம் உத்தமசோழபுரம் சூளைமேடு பாத முனியப்பன் கோவில் கும்பாபிஷேக விழா
சேலம் மாவட்டம் உத்தமசோழபுரம் சூளைமேடு பாத முனியப்பன் தோட்டத்தில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பாத முனியப்பன் திருக்கோவில் நூதன ஆலய மகா கும்பாபிஷேக விழா ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெற்றது.
சேலம் மாவட்டம் உத்தமசோழபுரம் சூளைமேடு பாத முனியப்பன் தோட்டத்தில் உள்ள சுமார் 200 ஆண்டுகள் பழமை வாய்ந்த பாத முனியப்பனுக்கு புதிதாக ஆலயம் அமைத்து, புதிய உருவச்சிலைகள் செய்து, மகா கும்பாபிஷேக விழா வெகு சிறப்பாக நடைபெற்றது.
கும்பாபிஷே விழாவினை முன்னிட்டு, கடந்த வெள்ளிக்கிழமை கர்ப்பநாதர் ஈஸ்வரன் திருக்கோவிலில் இருந்து புனித தீர்த்தக் குடங்கள், புனித கலசங்கள் எடுத்து முளைப்பாரி ஊர்வலம் நடைபெற்றது.
இரண்டாம் நாளாக யாகசாலை பூஜை மங்கல இசை விசேஷ சந்தி, பூதசுத்தி மண்டப அர்ச்சனை, வேதிகா அர்ச்சனை 108 திரவிய ஹோமம் நடைபெற்றது. மூன்றாம் கால யாக சாலை பூஜை, மங்கள இசை, ,108 மூலிகை ஹோமம், மகாபூர்ண திதி நடைபெற்றது.
இவ்விழாவிற்கான ஏற்பாட்டினை ஸ்ரீ பாத முனியப்பன் திருக்கோவில் நிர்வாக கமிட்டியினர் சிறப்பாக செய்திருந்தனர்.