ரவிந்த் கண் மருத்துவ மனையுடன் இணைத்து

Sep 16, 2024 - 20:38
 11
ரவிந்த் கண் மருத்துவ மனையுடன் இணைத்து

அகில பாரத ஐயப்ப சேவா சங்கமும், திருச்சி சௌராஷ்ட்ரா வாலிபர் சங்கம் மற்றும் மதுரை அரவிந்த் கண் மருத்துவ மனையுடன் இணைத்து மாபெரும் கண் பரிசோதனை சிகிச்சை முகாம்

அகில பாரத ஐயப்ப சேவா சங்கமும், திருச்சி சௌராஷ்ட்ரா வாலிபர் சங்கம் மற்றும் மதுரை அரவிந்த் கண் மருத்துவ மனையுடன் இணைத்து மாபெரும் கண் பரிசோதனை சிகிச்சை முகாம் (15.09.24) காலை 9 மணி முதல் திருச்சி தையல்கார தெருவில் உள்ள கீர்த்தனா திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இம்முகாமில்  பொதுமக்களுக்கு  கண் பரிசோதனை செய்து அறுவை சிகிச்சைக்கு தேர்ந்தெடுக்கப்படும் நபர்கள் பஸ் மூலம் மதுரை அழைத்து செல்லப்பட்டு அறுவை சிகிச்சைக்குப் பின் மீண்டும் திருச்சிக்கு கொண்டு வந்து விடப்படுவார்கள். இவை அனைத்தும் இலவசமாக செய்யப்படுகிறது. இந்நிகழ்ச்சியில் வழக்கறிஞர் A. S. சுதர்சன்,சேவா சங்கர் புரவலர் திரு. N. V. முரளி, செயலாளர் M. ஸ்ரீதர், பொருளாளர் J. சுரேஷ், துணைத்தலைவர் S. முத்து, சௌராஷ்ட்ரா சபா தலைவர் திரு B. R. ஜெனார்த்தனன், செயலாளர் திரு LIC K. சங்கர் mc, துணைத்தலைவர் திரு P. K. சக்திவேல், திரு N. R. சகஸ்ரநாமம், திரு A. T. ரமேஷ் பாபு, பேராசிரியர் V. S. ரெங்கநாதன்,திரு C. R. உமாபதி,சபா துணைசெயலாளர் B. C. வெங்கடேஷ் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்பித்தனார்.  இந்நிகழ்ச்சியை  வாலிபர் சங்க தலைவர் திரு. J. J. மகேஷ் துவக்கி வைத்தார், முகாம் ஏற்பாடுகளை சௌராஷ்ட்ரா வாலிபர் சங்க செயலாளர் திரு C. R. அம்சராம், துணைத் தலைவர்  S. D. முரளி, துணைச் செயலாளர் P. J. வெங்கடேஷ்,  இயக்குனர்கள் திரு.V. G., மணிமாறன், திரு M. K. ஸ்ரீனிவாசன் மற்றும் C. R. கார்த்திக் ஆகியோர் செய்தனர். இம் முகாமில்  265 நபர்கள் கலந்து கொண்டு  35 பேர் சிகிச்சைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு மதுரைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow