ஜோதிடர்களுக்கு தமிழக அரசு நல வாரியம் அமைக்க வேண்டும்
ஜோதிடர்களுக்கு தமிழக அரசு நல வாரியம் அமைக்க வேண்டும்
உலகத் தமிழில் ஜோதிடர்கள் மகாஜன சபையில் தீர்மானம்
சேலத்தில் உலகத் தமிழ் ஜோதிடர்கள் மகாசபை 11 வது ஜோதிட மாநாடு சேலத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. இதில் புகழ்பெற்ற ஜோதிட கலை அரசு ஆதித்ய குருஜி அவர்கள் பங்கேற்று சிறப்புரையாற்றினார்.
மாநாட்டில் நலிவடைந்த ஜோதிடர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. மேலும் தமிழக அரசு ஜோதிடர்களுக்கு நல வாரியம் அமைத்து அவர்களை பாதுகாக்க வேண்டும் எனவும், காலநிலை மாற்றத்தை அறிவியல் பூர்வமாக கணிக்கும் திறமை ஜோதிடர்களுக்கு உண்டு எனவும் தெரிவித்தார்.
மேலும் நலிந்து வரும் ஜோதிட கலையை தற்போது இளைஞர்கள் ஆர்வம் கொண்டு கற்று வருகிறார்கள் எனவும், தமிழக அரசு நல வாரிய திட்டங்கள் மூலம் ஜோதிடர்களுக்கு உதவி புரிய வேண்டும் எனவும் மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தொடர்ந்து இரண்டு நாட்கள் நடைபெற்ற இந்த மாநாட்டில் முன்னணி ஜோதிட கலை நிபுணர்கள் டி. ஆர். கோபு ஐயர், நாராயணன், ஜெயன் ராஜா, உள்ளிட்டு பலர் பங்கேற்றனர்.
What's Your Reaction?