மத்திய அரசின் சார்பில்மூன்று நாள் புகைப்படக் கண்காட்சி 

Jul 25, 2024 - 15:45
 22
மத்திய அரசின் சார்பில்மூன்று நாள் புகைப்படக் கண்காட்சி 
மத்திய அரசின் சார்பில்மூன்று நாள் புகைப்படக் கண்காட்சி 

மத்திய அரசின் சார்பில்மூன்று நாள் புகைப்படக் கண்காட்சி 

சேலம் மாவட்டம் திருவாக்கவுண்டனூர் புறவழிச்சாலையில்  அமைந்துள்ள தனியார் திருமண மண்டபத்தில் மத்திய அரசின் மக்கள் நலத்திட்டங்கள் குறித்து  புகைப்படக் கண்காட்சியை சிறப்பு அழைப்பாளராக சேலம் மேற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அருள்  கலந்துகொண்டு இந்த புகைப்பட கண்காட்சியை தொடங்கி வைத்தார். இதனையடுத்து, புகைப்படக் கண்காட்சி மற்றும் அரங்குகளையும் அவர் பார்வையிட்டார். இந்நிகழ்ச்சி மூன்று நாள் நடக்கவிருக்கிறது இதனைத் தொடர்ந்து மத்திய மக்கள் தொடர்பு மண்டல இயக்குனர் லீலா மீனாச்சி குத்து விளக்கு ஏற்றினார் மேலும் இந்த விழாவில், தருமபுரி கள விளம்பர அலுவலர் பிபின் எஸ்.நாத் வரவேற்றார். மத்திய அரசின் மக்கள் நலத்திட்டங்களை பொதுமக்கள் எளிதில் தெரிந்து கொள்ளும் வகையில் மத்திய மக்கள் தொடர்பகம் சார்பில் மாவட்டந்தோறும் புகைப்படக் கண்காட்சி மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. மத்திய அரசின் சார்பில் ஏழை எளிய மக்களுக்காக 26 வகையான மக்கள் நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. பொதுமக்களுக்கான மருத்துவக் காப்பீட்டை வழங்கும் ஆயுஷ்மான் பாரத் திட்டம்,, விபத்து காப்பீட்டுத் திட்டங்கள், ஓய்வூதியத் திட்டம், டிஜிட்டல் இந்தியா திட்டம், பிரதமரின் வீட்டுவசதித் திட்டம், இலவச சமையல் எரிவாயு இணைப்பு திட்டம், குழந்தைகளுக்கான ஊட்டச்சத்தினை உறுதி செய்யும் போஷன் அபியான் திட்டம், தொழில் முனைவோரை உருவாக்கும் முத்ரா திட்டம் என எண்ணற்ற திட்டங்களை இந்த மத்திய அரசு செய்து கொண்டுள்ளது இதில் அனைத்து சமூகத்தினரும் பொதுமக்களும் இளைஞர்களும் மாணவ மாணவிகளும் பயன்பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினருக்குமான இந்தத் திட்டங்கள் பொருந்தும்மேலும் பிரதமரின் ஸ்வ நிதித் திட்டத்தின் மூலம் வட்டியில்லா கடன் வழங்கப்படுகிறது. இதன்மூலம் கந்து வட்டிக் கொடுமையில் சிக்கியவர்களை முழுமையாக அதிலிருந்து மீட்க முடியும் என்பதை உறுதிப்படுத்துகிறோம் இதை மேலும் அறிந்து கொள்ள புத்தகம் மற்றும் செல்வமகள் சேமிப்புத் திட்ட விழிப்பணர்வு தகவல் கையேடுகள் வெளியிடப்பட்டன.
இந்நிகழ்ச்சியில் வங்கி மேலாளர் செந்தில்குமார், இளைஞர் நல அலுவலர் ட்ரவின் சார்லஸ்டன், பிரதமரின் மக்கள் மருந்தக மத்திய பார்வையாளர் அரவிந்தசாமி, சேலம் ஊராட்சி ஒன்றிய ஊட்டச்சத்து அலுவலர் ராஷ்மிகா , களவிளம்பரத்துறை தொழில்நுட்ப உதவியாளர்கள் சந்திரசேகரன், பாரதிய ஜனதா கட்சி நிர்வாகி கோபிநாத் முரளி, களவிளம்பரத்துறை உதவியாளர் தியாகராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர் .

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow