ஒரு கோடி உறுப்பினர்கள் சேர்க்கை முகாம்
சேலத்தில் டாக்டர் கலைஞர் நூற்றாண்டு விழா தொடக்கத்தை முன்னிட்டு கழகத்தை மேலும் வலிமைப்படுத்தும் ஒரு கோடி உறுப்பினர்கள் சேர்க்கை முகாம் மற்றும் வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்குச்சாவடி முகவர்கள் மற்றும் புதிய உறுப்பினர்கள் வீரபாண்டி தொகுதிக்குட்பட்ட பனமரத்துப்பட்டி ஒன்றியத்தில் தலைமைக் கழக தொகுதி வேட்பாளர் மீனா ஜெயக்குமார் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட கழக துணை செயலாளர் வீரபாண்டி தொகுதி பொறுப்பாளருமான பாரப்பட்டி சுரேஷ்குமார் அவர்கள் உறுப்பினர்கள் சேர்க்கும் நிகழ்ச்சியை நடத்தினார்.
இதில் நெய்க்காரப்பட்டி, அமானி கொண்டலாம்பட்டி, பொம்மநாயக்கன்பட்டி, நாழிக்கல்பட்டி, தாசநாயக்கன்பட்டி, நிலவாரப்பட்டி ஆகிய பகுதிகளுக்கு நேரில் சென்று புதிய முகவர்களை தேர்வு செய்து அவர்களுக்கு அறிவுரை வழங்கி புதிய உறுப்பினர்கள் சேர்ப்பதற்கு முயற்சி மேற்கொண்டார்.
இந்நிகழ்ச்சியில் பெரியசாமி, விஜய் சந்திரன், செந்தில் குமார், இளங்கோவன், சந்தோஷ் குமார், ஐயப்பன், பாலமுருகன், சேட்டு, கிருஷ்ணன், மகாலிங்கம், கணேசன் மற்றும் கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.