சேலத்தில் டார்லிங் பிரமாண்ட கடையை மாநகர காவல் ஆணையாளர் விஜயகுமாரி திறந்து வைத்தார்
சேலத்தில் டார்லிங் பிரமாண்ட கடையை மாநகர காவல் ஆணையாளர் விஜயகுமாரி திறந்து வைத்தார்..
சேலம் மாநகர் புதிய பேருந்து நிலையம் அருகே ஏ.ஆர்.ஆர்.எஸ் மல்டிபிளக்ஸ் திரையரங்கு செல்லும் சாலையில் டார்லிங் எலக்ட்ரானிக்ஸ், செல்போன் மற்றும் பர்னிச்சர்களுக்கான பிரம்மாண்ட விற்பனை கடை திறக்கப்பட்டுள்ளது.
டார்லிங் குழுமத்தின் நிர்வாக இயக்குனரும், தமிழ்நாடு ஓட்டல் உரிமையாளர் சங்கத்தின் தலைவருமான வெங்கட சுப்பு தலைமையில் நடைபெற்ற திறப்பு விழா நிகழ்ச்சியில் சேலம் மாநகர காவல் துறை ஆணையாளர் விஜயகுமாரி ரிப்பன் வெட்டி, குத்து விளக்கு ஏற்றி கடையை திறந்து வைத்தார். இதில் சேலம் மாநகர காவல் துணை ஆணையாளர் லாவண்யா மற்றும் முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து திறப்பு விழாவை முன்னிட்டு அனைத்து பொருட்களுக்கும் சிறப்பு சலுகை வழங்கப்பட்டுள்ளதால் ஏராளமான பொதுமக்கள் ஆர்வத்துடன் பொருட்களை வாங்க குவிந்தனர்.
What's Your Reaction?