மிலாது நபி மதநல்லிணக்க பேரணிஇஸ்லாமியர்கள் பங்கேற்பு

Sep 19, 2024 - 08:28
 12
மிலாது நபி மதநல்லிணக்க பேரணிஇஸ்லாமியர்கள் பங்கேற்பு

மிலாது நபி மதநல்லிணக்க பேரணிஇஸ்லாமியர்கள் பங்கேற்பு


சேலம் மாவட்டம் சேலம் மாநகராட்சி பின்பு அமைந்துள்ள கோட்டை மைதானத்தில் இஸ்லாமியர்களின் பேரணி நடைபெற்றது  இந்தப் பேரணிமிலாது நபியை முன்னிட்டு  தன்ஜிமே அஹ்லே சுன்னத் வல் ஜமாத் சார்பில் மத நல்லிணக்க பேரணி நடைபெற்றது. இதற்கு விளக்கம் என்னவென்றால் உலக மக்கள் பாகுபாடுகள் ஏதும் இன்றி நல்லிணக்கத்துடன் வாழவும், சாதி மத பேதம் இன்றி, ஏழை பணக்கார பாகுபாடின்றி அனைவரும் சமம் என்பதை வலியுறுத்தியும் இந்த பேரணியானது நடைபெற்றது. கோட்டை மைதானத்தில் தொடங்கிய இந்த பேரணியில் ஜாமியா மஸ்ஜித் முன்னாள் முத்தவல்லி நாசர்கான் தலைமையில் திரளானோர் கலந்து கொண்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகம், பெரியார் சிலை, திருவள்ளுவர் சிலை ரவுண்டானா வழியாக சென்று முஸ்லீம் கல்விச் சங்கத்தில் நிறைவடைந்தது இதில் ஏராளமான சிறுவர்கள் இஸ்லாமிய பெருமக்கள் இஸ்லாமிய பெண்கள் ஆண்கள் என ஏராளமானோர் இந்த பேரணியில் கலந்து கொண்டு மிக அமைதியாக இந்த ஊர்வலத்தில் பங்கு ஏற்று அனைவரும் சமம் என மக்களுக்கு உணர்த்தி கல்வி சங்கத்தில் நிறைவு பெற்றனர்

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow