சேலம் கோட்ட முகவர்களின் மாபெரும் ஆர்ப்பாட்டம்
சேலம் கோட்ட முகவர்களின் மாபெரும் ஆர்ப்பாட்டம்
அகில இந்திய எல்.ஐ.ஏ. எஸ்.ஐ முகவர்கள் சங்கத்தின் வழிகாட்டுதல்படி சேலம் கோட்ட முகவர்களின் மாபெரும் ஆர்ப்பாட்டம் கோட்டை மைதானத்தில் தென்மண்டல துணைத் தலைவர் எம்.பி. இளையப்பன் தலைமையில் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் சேலம் கோட்ட பொதுச் செயலாளர் டி.அமுதன் வரவேற்புரை வழங்கினார். பொருளாளர் எஸ்.ரமேஷ்பாபு,துணை செயலாளர் இ. மகேந்திரன், துணைத் தலைவர் கே. குழந்தைவேல், அனைத்திந்திய இ.சி.மெம்பர் எல். சீனிவாசன் முன்னிலை வகித்தனர். முன்னாள் தென்மண்டல தலைவர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கலைச்செல்வன்,தென் மண்டல இன்சூரன்ஸ் ஊழியர் கூட்டமைப்பு துணைத் தலைவர் தர்மலிங்கம், முன்னாள் தலைவர் ஜி. பாலகிருஷ்ணன் சிறப்புரை வழங்கினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் பாலிசிதாரர்களின் போனசை உயர்த்திட வேண்டி,பாலிசி மீதான கடன் வட்டியை குறைக்கவும், பாலிசி மீதான ஜிஎஸ்டி யை நீக்கிட வேண்டியும்,கமிஷன் முறையை தொடர வேண்டியும் , பாலிசி நுழைவு வயதினை65 ஆக உயர்த்திட வேண்டியும் ,முகவர் பணிக்கொடை 10 லட்சம் ஆக உயர்த்திட வழங்கிட வேண்டியும் ,முகவர் சட்டம் 2017 முகவர்களை பாதிக்கும் அம்சங்களை மாற்ற வேண்டியும் உட்பட 17 வகையான கோரிக்கைகளை முன்னிறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சேலம் கோட்ட காப்பீட்டு கழக ஊழியர் சங்க தலைவர் ஆர்.நரசிம்மன், பொதுச் செயலாளர் ஆனந்த், முன்னாள் பொதுச் செயலாளர் மனோகரன் உமாபதி, எம்.செல்வம், முன்னாள் கோட்ட பொருளாளர் ஆர். செல்வராஜ் பரசுராமன் மற்றும் சேலம் கோட்ட முன்னாள் நிர்வாகிகள் கிளைச் சங்க நிர்வாகிகள் மற்றும் முகவர் பெருமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தின் முடிவில் தென்மண்டல ஈ.சி. மெம்பர் ஆர். லோகநாதன் நன்றியுரை வழங்கினார்.
What's Your Reaction?