சென்னையில் நடைபெற்ற சிலம்பாட்ட போட்டியில் பரிசுகளை குவித்த பங்களா புதூர் கிராம பள்ளி மாணவ மாணவிகள்
சென்னையில் நடைபெற்ற சிலம்பாட்ட போட்டியில் பரிசுகளை குவித்த பங்களா புதூர் கிராம பள்ளி மாணவ மாணவிகள்
கரூர் மாவட்டம் இனுங்கூர் அருகே சுக்காம்பட்டியில் செயல்பட்டு வரும் தென்னிந்திய சிலம்பம் அகாடமி பயிற்சியாளர் குருமூர்த்தி கடந்த ஐந்து வருடமாக சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 150க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகளுக்கு சிலம்ப பயிற்சி அளித்து வருகிறார்.
மேலும் இவர் திருச்சி மாவட்டம் திருப்பராய்த்துறையில் செயல்பட்டு வரும் தபோவனம் பள்ளியிலும் தபோவனம் பள்ளியில் தினமும் காலை சிலம்ப பயிற்சி அளித்து வருகிறார். இவரிடம் பயிற்சி பெற்று வரும் மாணவ மாணவிகள் சமீபத்தில் சென்னையில் நடைபெற்ற சிலம்பாட்ட போட்டியில் பத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்று முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளனர். திருச்சி பெட்டவாய்த்தலை சேவை சாந்தி மெட்ரிகுலேஷன் பள்ளியில் படிக்கும் ஆறாம் வகுப்பு மாணவன் சபரி வாசன் ஓவர் ஆல் சாம்பியன் பட்டத்துடன் பரிசு கோப்பை, வெள்ளி காயின் , டீ சர்ட் போன்றவற்றையும் பரிசாக பெற்றார் .
மேலும் பரிசு பெற்ற மாணவ மாணவிகள் அனைவரும் பங்களாபுதூர் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
What's Your Reaction?