சேலத்தில் ஜி எம் எம் கோ கேட் கொண்டாட்டம்

Dec 7, 2024 - 09:43
 4
சேலத்தில் ஜி எம் எம் கோ கேட் கொண்டாட்டம்

சேலத்தில் ஜிஎம்எம்கோ கேட் கொண்டாட்டம்

சுரங்கத் தொழில்களுக்கான உலகத்தரம் வாய்ந்த எந்திரங்கள், உள்கட்டமைப்பு வசதிகள்: கேட்டர்பில்லர் அறிமுகம் சுரங்கத் தொழில்களுக்காக வடிவமைக்கப்பட்ட உலகத் தரம் வாய்ந்த இயந்திரங்கள், உபகரணங்கள் மற்றும் உள்கட்டமைப்பு வசதிகளை சிறு நகரங்களுக்கும் கொண்டு செல்ல கேட்டர்பில்லர் திட்டம் ----- சேலத்தில் வாடிக்கையாளர்களின் வீட்டு வாசலில் நேரடியாக உதிரி பாகங்கள், சேவைகளை வழங்கும் புதிய மேம்படுத்தப்பட்ட 3எஸ் சேவை மையத்தை திறக்கும் ஜிஎம்எம்கோ ------ சேலம், டிச. 6- இந்தியாவில் கேட்டர்பில்லர் நிறுவனத்தின் நம்பகமான பங்குதாரரான ஜிஎம்எம்கோ நிறுவனம், ஜிஎம்எம்கோ கேட் கொண்டாட்டம் என்னும் திட்டத்தை சேலத்தில் அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலம் சிறு நகரங்களில் சுரங்கத் தொழில்களில் ஈடுபட்டு வரும் வாடிக்கையாளர்களுக்கு தேவையான பல்வேறு எந்திரங்கள் மற்றும் உபகரணங்களை அவர்களின் வீட்டு வாசலுக்கே கொண்டு சென்று கேட்டர்பில்லர் விற்பனை செய்ய உள்ளது. சேலத்தில் நடைபெற்ற இதற்கான துவக்க விழாவில் உள்கட்டமைப்பு மற்றும் சுரங்கத் தொழில்களுக்காக வடிவமைக்கப்பட்ட அதிநவீன கேட் உபகரணங்கள் வாடிக்கையாளர்கள், தொழில்துறை தலைவர்கள் மற்றும் பொறியியல் வல்லுனர்களுக்காக காட்சிப்படுத்தப்பட்டு இருந்தது. சிறு நகரங்களில் உள்ள தனிநபர் மற்றும் வணிக நிறுவனங்களும் அதிநவீன தொழில்நுட்பத்தை அறிந்து கொள்ளும் வகையில் கேட்டர்பில்லர் ரோட் ஷோ நிகழ்ச்சியை நடத்தியது. இதுபோன்ற நிகழ்ச்சிகள் மூலம் தங்கள் தயாரிப்புகளை சிறு நகரங்களுக்கும் கொண்டு செல்வதன் மூலம் இந்தியாவின் தொழில்வளர்ச்சிக்கு ஜிஎம்எம்கோ மற்றும் கேட்பில்லர் உறுதி ஏற்றுள்ளன. இந்த மெகா ரோட்ஷோ நிகழ்ச்சியானது, வரும் 12-ந்தேதி வரை சேலம் மாவட்டத்தில் நடைபெற உள்ளது. இது குறித்து ஜிஎம்எம்கோ நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி சந்திரசேகர் கூறுகையில், தமிழ்நாடு, கர்நாடகா மற்றும் கேரளாவிற்கான கட்டுமான உபகரண வணிகத்திற்கான ஒரு முக்கிய மையமாக சேலம் உள்ளது, மேலும் சேலத்தில் ஆர்வமுள்ள வாடிக்கையாளர்கள் மற்றும் அனுபவம் வாய்ந்த ஒப்பந்ததாரர்கள் அதிக அளவில் உள்ளனர். சாலை அமைப்பதற்கும், வரவிருக்கும் முக்கிய திட்டங்களுக்கு தேவையான ஜல்லி கற்கள் சப்ளையில் இருந்து அதற்கான உள்கட்டமைப்பு வசதிகள் மற்றும் எந்திரங்கள், உபகரணங்கள் சப்ளை வரை இந்த துறையில் முக்கிய நகரமாக சேலம் விளங்கி வருகிறது. உள்ளூர் வணிகங்களை மேம்படுத்துவதற்காக கேட்டர்பில்லரின் அதிநவீன எந்திரங்கள், உபகரணங்கள் ஆகியவற்றை ரோட் ஷோ மூலம் காட்சிப்படுத்துவதற்கான சிறந்த நகரமாக சேலம் உள்ளது என்று தெரிவித்தார். இது குறித்து கேட்டர்பில்லர் செய்தி தொடர்பாளர் கூறுகையில், இந்தியாவின் உள்கட்டமைப்பு மற்றும் சுரங்கத் துறைகளில் சிறு நகரங்களுக்கான ஆற்றல் மற்றும் திறனை சேலம் நகரம் பிரதிபலிக்கிறது. வாடிக்கையாளர்களுக்கு தங்கள் துறையில் சிறந்த லாபத்தை பெறும் வகையில் ஜிஎம்எம்கோ கேட் கொண்டாட்டம் நிகழ்ச்சியை நாங்கள் இங்கு ஏற்பாடு செய்துள்ளோம். இதன்மூலம் எங்களின் அதிநவீன எந்திரங்கள் மற்றும் உள்ளூர் தொழில்துறை தேவைகளை பூர்த்தி செய்யும் தீர்வுகளை வாடிக்கையாளர்கள் பார்த்து அறிந்து கொள்ள முடியும். ஜிஎம்எம்கோ உடனான எங்கள் கூட்டாண்மை, சேலம் போன்ற முக்கிய சந்தைகளில் எங்கள் வர்த்தகத்தை மேலும் வலுப்படுத்தும் அதே வேளையில் இப்பகுதி வளர்ச்சிக்கும் முக்கிய பங்கு வகிக்கிறது என்று தெரிவித்தார். ஜிஎம்எம்கோ நிறுவனத்தின் கட்டுமானப் பிரிவு துணைத் தலைவர் ராகுல் ஷோரே கூறுகையில், உள்கட்டமைப்பு மற்றும் சுரங்க வணிகத்தில் சேலம் நகரம் சிறப்பான வளர்ச்சி அடைந்து வருகிறது. அந்த வகையில் எங்களின் அதிநவீன எந்திரங்கள் மற்றும் தீர்வுகள் மூலம் வணிகங்களை மேம்படுத்தும் எங்கள் தொலைநோக்கு பார்வைக்கு சேலம் நகரம் சிறந்த நகரமாக இருக்கும் என்று நாங்கள் கருதுகிறோம். மேலும் இந்த நிகழ்ச்சியின் மூலம், கேட்டர்பில்லரின் தயாரிப்புகளை நேரடியாக வாடிக்கையாளர்களுக்கு நாங்கள் கொண்டு வருகிறோம் என்று தெரிவித்தார். கேட் கொண்டாட்டத்தின் முக்கிய அம்சங்கள் மெகா கேட் கண்காட்சி: கேட் பேக்ஹோ லோடர்கள் மற்றும் எக்சாவேட்டர்ஸ் எந்திரங்களின் நேரடி விளக்கங்கள் உட்பட, உள்ளூர் தொழில்களுக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்ட கேட்டர்பில்லரின் மற்ற எந்திரங்களையும் காட்சிப்படுத்துகிறது. எளிமையான கடன் வசதிகள் : புதுமையான கடன் திட்டங்கள், எந்திர மறுகட்டமைப்புகள் மற்றும் திட்டமிடப்பட்ட எண்ணெய் மாதிரிகள் பற்றி வாடிக்கையாளர்கள் அறிந்து கொள்ளலாம். மேலும் வாடிக்கையாளர்கள் இந்த துறை சம்பந்தமான பல்வேறு விஷயங்களையும் அறிந்து கொள்ள முடியும். தனிப்பயனாக்கப்பட்ட சலுகைகள்: சேலத்தின் தனித்துவமான வணிகச் சூழலுக்கு ஏற்ற வகையில் பல்வேறு தனிப்பயனாக்கப்பட்ட திட்டங்கள் உள்ளன. கட்டுமான உபகரணங்கள் தொழில் ஆண்டுதோறும் 10 முதல் 15 சதவீதம் வளர்ச்சியடைந்து வருகிறது. இந்த துறையில் இந்தியா உலகின் மூன்றாவது பெரிய சந்தையாக மாறி வருகிறது. சேலத்தில் இந்த நிகழ்ச்சியை நடத்துவதன் மூலம் ஜிஎம்எம்கோ மற்றும் கேட்டர்பில்லர் ஆகியவை சிறு நகரங்களில் வலுவான உள்கட்டமைப்பு மற்றும் பொருத்தமான தீர்வுகளை வழங்கி இந்தியாவின் தொழில் வளர்ச்சிக்கான தங்கள் உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்துகின்றன. மேலும் சேலத்தில் வாடிக்கையாளர்களின் வீட்டு வாசலுக்கே சென்று நேரடியாக உதிரி பாகங்கள், சேவைகளை வழங்கும் புதிய மேம்படுத்தப்பட்ட 3எஸ் சேவை மையத்தை ஜிஎம்எம்கோ திறக்க உள்ளது. இதன் மூலம் வாடிக்கையாளர்களின் தேவைகளை உடனடியாக பூர்த்தி செய்யும் வகையில் கேட்டர்பில்லரின் எந்திரங்கள் மற்றும் உபகரணங்கள் இங்கு விற்பனை செய்யப்படுவதோடு அவர்களின் அனைத்து தொழில்நுட்ப தேவைகளுக்கும் உடனடி தீர்வு அளிக்கப்படும் என்றும் ஜிஎம்எம்கோ கூறியுள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow