திருமாவளவன் அவதூறாக பேசிய தடா பெரியசாமி பாஜக அண்ணாமலை கைது செய்
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் அவர்களை அவதூறாக பேசிய தடா பெரியசாமி பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கைது செய்ய வலியுறுத்தி சாலை மறியல் போராட்டம்
500க்கும் மேற்பட்ட விடுதலை சிறுத்தை கட்சியின் பங்கேற்பு...
தஞ்சாவூரில் அண்மையில் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் அவர்களையும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினரையும் இழிவாக
தடா பெரியசாமி மற்றும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அவர்களை கைது செய்ய வலியுறுத்தி தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்
அதன் ஒரு பகுதியாக சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே பாஜகவின் தடா பெரியசாமி மற்றும் அண்ணாமலை அவர்களை கைது செய்ய வலியுறுத்தி விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஒருங்கிணைந்த மாவட்டம் சார்பில் மறியல் போராட்டம் நடைபெற்றது
இந்த போராட்டத்தின் 500க்கும் மேற்பட்ட பாஜக அரசை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பினர் தொடர்ந்து அனுமதி இன்றி மறியலில் ஈடுபட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியினருக்கும் காவல்துறையினருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது
முன்னதாக அண்ணா பூங்காவில் இருந்து ஆட்சியர் அலுவலகம் பேரணியாக வர முயற்சித்த விடுதலை சிறுத்தைகள் கட்சியினரை காவல்துறையினர் தடுத்து நிறுத்தினார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மாவட்ட பொறுப்பாளர்கள், மாநில நிர்வாகிகள், தொகுதி பொறுப்பாளர்கள், நாடாளுமன்ற தொகுப்பாளர்கள், தலைமை செயற்குழு உறுப்பினர்கள், செயற்குழு உறுப்பினர்கள், பகுதி செயலாளர், நிர்வாகிகள், மற்றும் மாவட்ட நிர்வாகிகள் உள்ளிட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பெருந்திரளாக கலந்து கொண்டு கோஷங்களில் எழுப்பினர்
What's Your Reaction?