மொத்த வாக்காளர்களில் 30 சதவீதம் பேரை திமுகவில் உறுப்பினர்களாக சேர்க்க இலக்கு நிர்ணயம்

Jul 2, 2025 - 07:39
 20
மொத்த வாக்காளர்களில் 30 சதவீதம் பேரை திமுகவில் உறுப்பினர்களாக சேர்க்க இலக்கு நிர்ணயம்

மொத்த வாக்காளர்களில் 30 சதவீதம் பேரை திமுகவில் உறுப்பினர்களாக சேர்க்க இலக்கு நிர்ணயம்

அமைச்சர் கே என் நேரு பேட்டி

மொத்த வாக்காளர்களில் 30 சதவீதம் பேரை திமுகவில் உறுப்பினர்களாக சேர்க்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே திமுக வில் ஒரு கோடிக்கு மேல் உறுப்பினர்கள் உள்ளனர் 2 கோடியாக மாற்ற முதலமைச்சர் கூறியுள்ளார்.

அதிமுக - பாஜக கூட்டணி குறித்த எடப்பாடி பேச்சில் உறுதி இல்லை: திமுக கூட்டணி கட்சிகளுக்கு கூடுதல் சீட்டுகள் ஒதுக்குவது குறித்து தலைமை முடிவு செய்யும்.

திருச்சி தில்லை நகர் அலுவலகத்தில் தி.மு.க. முதன்மைச் செயலாளரும்  தகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சருமான கே.என். நேரு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார் . அப்போது அவர் கூறியதாவது; ஓரணியில் தமிழ்நாடு எனும் மாபெரும் திமுக உறுப்பினர் சேர்க்கை பரப்புரை திட்டத்தை தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின்  இன்று தொடங்கி வைத்துள்ளார்.  நீட் தேர்வு விலக்கு, இந்தி மொழி திணிப்பு எதிர்ப்பு உள்ளிட்ட மத்திய அரசு தொடர்ச்சியாக தமிழகத்தை வஞ்சிப்பது தொடர்பாக பொதுமக்களுக்கு எடுத்துச் சொல்லி விரும்பும் மக்களை தமிழக முழுவதும் நாளை மறுநாள் முதல்உறுப்பினர்கள் சேர்க்க உள்ளோம். பாஜக ஆளும் மகாராஷ்டிரா மாநில முதல்வர் கூட இந்தி வேண்டாம்.  இரு மொழிக் கொள்கை போதும் என கூறியுள்ளார். 
மொத்த வாக்காளர்களில் 30 சதவீதம் பேரை திமுகவில் உறுப்பினர்களாக சேர்க்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே திமுக வில் ஒரு கோடிக்கு மேல் உறுப்பினர்கள் உள்ளனர் 2 கோடியாக மாற்ற முதலமைச்சர் கூறியுள்ளார்.  டாஸ்மாக் மதுபான கடைகள் படிப்படியாக குறைக்கப்படும் இனிமேல் திறக்கப்படாது என நீதிமன்றத்தில் அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  சிவகங்கை இளைஞர் கொலையில் சிபிஐ விசாரணை கேட்கும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தின் போது  டிவியை பார்த்து தான் துப்பாக்கிச் சூட்டை தெரிந்து கொண்டேன் என்று சொன்னார்.  தமிழகத்தின் ஒட்டுமொத்த மக்கள் தொகையை 6 கோடியாக இருக்கும் போது இரண்டு கோடி பேரை புதிதாக கட்சி ஆரம்பித்து உள்ள தமிழக வெற்றி கழகத்தால் சேர்க்க முடியும். அவர்கள் சொல்வது நம்புவது போல் இல்லை. கூடுதல் சீட்டுகள் கேட்கும் கூட்டணி கட்சிகளுக்கு சீட்டு ஒதுக்கீடு செய்வது குறித்து தலைமை தேர்தல் நேரத்தில் முடிவு செய்யும்.  கடந்த முறை போட்டியிட்டு வெற்றி பெற்ற வேட்பாளர்கள் மீண்டும் போட்டியிடுவது தொடர்பாகவும் முதலமைச்சர் முடிவு செய்வார்.  பஞ்சப்பூர் ஒருங்கிணைந்த பஸ் நிலையம் தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலினால் திறந்து வைக்கப்பட்டது. அதனை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர சில பணிகள் உள்ளதால் தாமதம் ஆகி உள்ளது. 
வருடாந்திர பராமரிப்புக்கு நிதி ஒதுக்கப்பட்டு நிதி ஆலோசனைக் குழு அனுமதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அனுமதி கிடைத்தவுடன் ஒரு வாரத்தில் மக்கள் பயன்பாட்டுக்கு பஸ் நிலையம் திறந்து வைக்கப்படும். 
தேர்தல் வாக்குறுதி படி மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைந்திருந்தால் நீட் தேர்வில் இருந்து விளக்கு பெற்றிருப்போம். 
மத்திய அரசுக்கு சாதகமான ஆட்சி மலரும் போது நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற்று விடுவோம். தமிழகத்தில் கூட்டணி ஆட்சி தான் நிலவப்போகிறது என்று மத்திய மந்திரி அமித்ஷா தெரிவித்த நிலையில் எடப்பாடி தனி பெரும்பான்மையுடன் அதிமுக வெற்றி பெற்ற ஆட்சி அமைக்க வேண்டும் என்று முரண்பாடாக தெரிவித்துள்ளார்.எடப்பாடியின் பேச்சில் உறுதி இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின் போது மாவட்ட செயலாளர்கள் வைரமணி, காடுவெட்டி தியாகராஜன் எம்எல்ஏ, மாநகர செயலாளர் மேயர் அன்பழகன் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow