இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநில தகவல் தொழில்நுட்ப அணியின் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது

Dec 20, 2025 - 18:16
 52
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநில தகவல் தொழில்நுட்ப அணியின் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநில தகவல் தொழில்நுட்ப அணியின் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநில தகவல் தொழில்நுட்ப அணியின் பொதுக்குழு கூட்டம்  திருச்சி ஏ. எம். கே மஹாலில் மாநிலத் தலைவர் எம். எஸ். சல்மான் முஹம்மது தலைமையில் நடைபெற்றது. மாநில பொருளாளர் கோம்பை ஜெ. நிஜாமுதீன் வரவேற்புரை ஆற்றினார். IUML IT விங்கின் மாநில நிர்வாகிகள், மாவட்டங்களின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் தேசிய தலைவர் முனீருல் மில்லத் பேராசிரியர் கே. எம் காதர் மொகிதீன் (முன்னாள் எம்பி), மாநில பொதுச் செயலாளர் கே ஏ எம் முஹம்மது அபூபக்கர் (முன்னாள் எம்எல்ஏ), மாநில செயலாளர் ஆடுதுறை ஷாஜகான், மாநில துணைச்செயலாளர்கள் வி.எம்.பாரூக், ஏ.எஸ்.அப்துல் ரஹ்மான் ரப்பானி, திருச்சி தெற்கு மாவட்ட தலைவர் K.M.K.ஹபீபுர் ரஹ்மான், திருச்சி தெற்கு மாவட்ட செயலாளர் ஹுமாயூன், தெற்கு மாவட்ட பொருளாளர் அல்ஹாபிழ் A.அல்லாபக்ஷ, திருச்சி வடக்கு மாவட்ட தலைவர் ஹாஜி M.அப்துல் வஹாப், திருச்சி வடக்கு மாவட்ட செயலாளர் முஹம்மது நிஜாமுத்தீன், திருச்சி வடக்கு மாவட்ட பொருளாளர் லியாக்கத் அலி, முஸ்லிம் யூத் லீக் தேசிய செயலாளர் R.முகமது இலியாஸ் M.C., முஸ்லிம் மாணவர் பேரவை மாநில தலைவர் A.M.H.அன்சர் அலி உள்ளிட்ட மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர்.

இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:

1 தமிழ்நாடு முதல்வர் மாண்புமிகு மு க ஸ்டாலின் அவர்களுக்கு நன்றி:

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் முனீருல் மில்லத் பேராசிரியர் கே.எம்.காதர் முகைதீன் அவர்களுக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் 'தகைசால் தமிழர் விருது' வழங்கி கௌரவித்த மாண்புமிகு முதல்வர் மு. க. ஸ்டாலின் அவர்களுக்கு இக்கூட்டம் நெஞ்சம் நிறைந்த நன்றியை உரித்தாக்குகிறது.

தமிழக முஸ்லிம்களின் கோரிக்கையை ஏற்று புனித ஹஜ் பயணம் மேற்கொள்ளும் ஹாஜிகளின் வசதிக்காக சென்னை விமான நிலையம் அருகே நங்கநல்லூரில் ஹஜ் இல்லத்தை ரூபாய் 39.20 கோடியில் தமிழ்நாடு அரசின் சார்பில் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்ததற்கும்.

இந்திய அரசியல் நிர்ணய சபையில் தமிழ் ஆட்சி மொழியாக வேண்டும் என குரல் கொடுத்த கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் அவர்களுக்கு பெருமை சேர்க்கும் வகையில் அவர்களின் பிறந்தகமான திருநெல்வேலியில் ரூபாய் 110 கோடி மதிப்பீட்டில் தமிழ்நாடு அரசின் சார்பில் மாபெரும் நூலகத்திற்கு அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைப்பதற்கும் மாண்புமிகு முதல்வர் மு க ஸ்டாலின் அவர்களுக்கு இக்கூட்டம் நெஞ்சம் நிறைந்த நன்றியை தெரிவிக்கிறது

2 தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தீவிர பணி:

நடைபெற உள்ள தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற ஜனநாயகக் கூட்டணியின் வேட்பாளர்கள் வெற்றிக்கு முழு மூச்சுடன் பாடுபடுவது என்றும், இக் கூட்டணியின் சார்பில் போட்டியிடும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர்கள் வெற்றிக்கு முழுமையான செயல் திட்டங்களுடன் உழைப்பது என்றும் இக்கூட்டம் முடிவு செய்கிறது.

#தொகுதி ஒதுக்கீடு

கண்ணியத்துக்குரிய காயிதேமில்லத் பெருந்தகை காலந்தொட்டு இன்று வரை திமுகவோடு உளப்பூர்வமான உறவைப் பேணும் எங்களுடைய தாய்ச்சபைக்கு அன்பின், நட்பின் அடையாளமாக தலைநகர் சென்னையிலும் ஒரு சட்டமன்ற தொகுதியை திமுகவிடம் கேட்டுப்பெற பேராசிரியர் பெருந்தகை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் அவர்களிடம் அன்போடு கேட்டுக் கொள்கிறோம்

3. முஸ்லிம் லீக்கின் ஒரு ஒட்டு ஒரு நோட்டு திட்டத்திற்கு பங்களிப்பு:

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநில செயற்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானமான ஒரு ஓட்டு ஒரு நோட்டு திட்டத்திற்கு முழு அளவில் முயற்சி மேற்கொண்டு பங்களிப்பு செய்வது என்று இக்கூட்டம் முடிவு செய்கிறது.

4 மஹல்லா ஜமாத் மாநில மாநாட்டிற்கு மகத்தான ஒத்துழைப்பு:

எதிர்வரும் 2026 ஜனவரி 28 அன்று கும்பகோணத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நடத்தும் மஹல்லா ஜமாத் மாநில மாநாட்டை மிகப்பெரிய அளவில் வெற்றி பெறச் செய்யும் விதத்தில் அனைத்து வகையான பணிகளிலும் முழுமையாக ஈடுபடுவது என இக்கூட்டம் முடிவு செய்கிறது.

5 வாக்காளர் பட்டியலில் தீவிர கவனம்:

இந்திய தேர்தல் ஆணையம் மேற்கொண்ட வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை தொடர்ந்து 19. 12. 2025 அன்று வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் தமிழ்நாட்டில் 97 லட்சத்து 37 ஆயிரத்து 832 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ள அதிர்ச்சிகரமான செய்தி வெளிவந்துள்ளது. இதில் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் முஸ்லிம் வாக்காளர்கள் எல்லா மாவட்டங்களிலும் நீக்கப்பட்டுள்ளார்க இதனால் வாக்குரிமை மட்டுமின்றி ஒன்றிய அரசின் சூழ்ச்சி அரசியலான குடியுரிமையும் கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளது. எனவே டிசம்பர் 19 முதல் ஜனவரி 18 வரை நடைபெற உள்ள புதிய வாக்காளர் பதிவு வெளிநாடு வாக்காளர் பதிவு, வாக்காளர் திருத்தம் போன்ற பணிகளில் அதற்குரிய படிவங்களில் மனு செய்து எவருடைய பெயரும் விடுபட்டு விடாமல் முழுமையான கவனத்தை செலுத்த முழு அளவில் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்வது என்று இக்கூட்டம் முடிவு செய்கிறது.

6 உமீத் போர்ட்லில் வக்ப் சொத்துக்கள் பதிவு:

ஒன்றிய பாஜக அரசு கொண்டுவந்துள்ள வக்ப் திருத்த சட்டமான உமீத் சட்டத்தின் அடிப்படையில் வக்ப் சொத்துக்களை உமீத் போர்ட்டலில் பதிவு செய்யும் காலக்கெடு முடிந்து, தமிழ்நாடு வக்பு வாரியத்தின் முயற்சியில் வக்பு தீர்ப்பாயம் மூலம் ஆறு மாத கால அவகாசம் பெறப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் இன்னும் பெரும்பாலான வக்பு பொத்துக்கள் உமீத் போர்ட்டலில் பதிவு செய்யப்படாமல் உள்ளன. இதனுடைய பேராபத்தை உணரச் செய்து வக்ப் நிறுவனங்களின் நிர்வாகிகள் உடனடியாக உமீத் போர்ட்டலில் வக்ப் சொத்துக்களை பதிவு செய்ய தமிழக முழுவதும் விழிப்புணர்வு பிரச்சார பணிகளை செய்வது என்று இக்கூட்டம் முடிவு செய்கிறது.

7 ஐ.யூ. எம். எல். ஐ டி விங்கை பலப்படுத்தும் பணி:

இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் அங்கீகரிக்கப்பட்ட அணிகளில் ஒன்றான தகவல் தொழில்நுட்ப அணியை தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் தீவிரப்படுத்தி தாய்சபை பணிகளுக்கு பேருதவி புரியவும், அதன்பணிகளை நாட்டு மக்களுக்கு கொண்டு சேர்க்கவும் முழு அளவில் உழைப்பது என்று இக்கூட்டம் உறுதி ஏற்கிறது

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow