சாராய வியாபாரிகளிடம் இருந்து தங்கள் உயிரை காப்பாற்ற வேண்டி காவல் துறையினரிடம் கோரிக்கை மனு
சாராய வியாபாரிகளிடம் இருந்து தங்கள் உயிரை காப்பாற்ற வேண்டி காவல் துறையினரிடம் கோரிக்கை மனு
சேலம் மாவட்டம் ஆத்தூர் பகுதி கருமந்துறை பகுதியில் வசித்து வருபவர் சுப்பிரமணி சில தினங்களுக்கு முன்பாக தனது வீட்டிலிருந்து வெளியே செல்லும் பொழுது சாராய வியாபாரி கும்பல் சுப்பிரமணியை வழிமறித்து காவல்துறைக்கு நீதான் தகவல் தெரிவிக்கின்றாயா என்று கேட்டு சுப்பிரமணியை கடுமையாக தாக்கி உள்ளனர் இதனை தொடர்ந்து தாக்குதலை தடுக்க வந்த அவரது மனைவியையும் தாக்கினார் தங்கள் உயிருக்கு பாதுகாப்பு இல்லை என கருதி இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கருமந்துறை காவல் நிலையத்தில் புகார் அளித்த போது புகாரை ஏற்க மறுத்து சுப்ரமணியம் மீதும் சுப்பிரமணியத்தின் மனைவி மீதும் புகார் உள்ளது என்று பாதிக்கப்பட்ட நபர்கள் மீது வழக்கு பதிவு செய்யும் கருமந்துறை காவல்துறையினர் அவர்களை மிரட்டி உள்ளனர் இதனை தொடர்ந்து கருமந்துறை காவல் துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் தங்கள் உயிருக்கு பாதுகாப்பு வழங்கிய வலியுறுத்தியும் சேலம் மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் சாராய வியாபாரிகளிடமிருந்து தங்கள் உயிர் பாதுகாப்பு கேட்டு கோரிக்கை மனுவை அளித்தனர் தங்கள் உயிருக்கு ஆபத்து ஏதோ ஏற்பட்டால் அந்த சாராய வியாபாரி கும்பல் தான் காரணம் என்று மனுவில் குறிப்பிட்ட உள்ளனர்
What's Your Reaction?