உத்தமசோழபுரம் ஊராட்சி சிறப்பு கிராம சபா கூட்டம்
சேலம் மாவட்டம் வீரபாண்டி ஊராட்சி ஒன்றியம் உத்தமசோழபுரம் ஊராட்சி அரியாம்பாளையம் மாரியம்மன் கோவில் அருகே சிறப்பு கிராம சபா கூட்டம்
சேலம் மாவட்டம் வீரபாண்டி ஊராட்சி ஒன்றியம் உத்தமசோழபுரம் ஊராட்சி அரியாம்பாளையம் மாரியம்மன் கோவில் அருகே சிறப்பு கிராம சபா கூட்டம் நடைபெற்றது. உத்தமசோழபுரம் ஊராட்சி மன்ற தலைவர் பி.வி.பெருமாள் தலைமை தாங்கி உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு ஊராட்சி மன்றத்தில் தேவைகளை முழுமையாக பயன்படுத்த ஆலோசனை நடத்தப்பட்டது. இக்கூட்டத்தில் விவாத பொருளாக அப்பகுதியில் மயானம் அமைப்பது, அதில் சடங்குகள் செய்ய தண்ணீர் மற்ற வசதிகள் செய்து தருவது, ஊர் பொது இடத்தில் மாணவர்கள் விளையாடுவதற்கு விளையாட்டு மைதானம் அமைத்து தருவது, அருகே உள்ள நூலகத்தை இங்கே இடம் மாற்றம் செய்வது ஆகியோவை விவாதித்து அதற்குண்டான நடவடிக்கை எடுக்க மனு மேலிடத்துக்கு அனுப்பும் முயற்சியில் ஈடுபடுவதாக வாக்குறுதி அளித்தார். இந்நிகழ்ச்சியில் வார்டு உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
What's Your Reaction?