சேலத்தில் திருமணி முத்தாறு திருவிழா

Sep 27, 2024 - 19:36
 14
சேலத்தில் திருமணி முத்தாறு திருவிழா

சேலத்தில் திருமணி முத்தாறு திருவிழா

அகில பாரதீய சந்நியாசிகள் சங்கம் நடத்திய திருமணி முத்தாறு திருவிழா சேலம் தெய்வீக திருமண மண்டபத்தில் 15/9 /2024 முதல் 26/9/2024 வரை 12 நாட்கள் சிறப்பாக நடைபெற்றது. இத்திருவிழாவானது 12 நாட்களும் மாலை வேளையில் திருமணிமுத்தாறு நதிக்கு சிறப்பு பூஜைகளோடு ஆரத்தி விழாவும் எடுக்கப்பட்டது. இதனையொட்டி மாநாட்டின்  இறுதியில் பன்னிரண்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. முதலாவதாக அகில இந்திய அளவில் உள்ள நதிகளை இணைக்க நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்றி தேசிய மயமாக்க வேண்டும் எனவும் ,இதன் மூலம் மக்களிடம் தேசிய ஒருமைப்பாடு வளர்வதற்கும் நதிநீர் குடிநீருக்கும், விவசாயத்திற்கும் பயன்படுவதோடு நாட்டின் பொருளாதார முன்னேற்றத்திற்கு நீர் மின் உற்பத்தி மற்றும் நீர் வழிச்சாலை உருவாக்க முடியும். இந்து சமய அறநிலைத்துறையில் இருந்து கோவில்கள் விடுவிக்கப்பட்டு திருக்கோவில்களின் செயல்பாட்டிற்கு ஆதீனங்கள் மடாதிபதிகள் ஆலோசனையோடு இந்துமத ஆன்மிகச் சான்றோர்களை ஒருங்கிணைத்து தனித்தனி வாரியம் அமைத்து ஒப்படைக்க வேண்டும் எனவும், தமிழ்நாட்டில் கடந்த மூன்று ஆண்டுகளில் இடிக்கப்பட்ட இந்து கோவில்களை மீண்டும் கட்ட அப்பகுதி மக்களின் விருப்பத்தின் அடிப்படையில் இடம் ஒதுக்கப்பட்டு கோவில்கள் கட்டப்பட வேண்டும் என்றும், வயது மூத்த நோய்வாய்ப்பட்ட உதவி தேவைப்படும் ஆதரவற்ற சந்நியாசிகள் சங்க உறுப்பினர்களுக்கு என கோவை முதலிபாளையம் ராமானந்தம் பீடத்தில் பேரூர் ஆதீன வழிபாட்டுதலின்  பேரில் தங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்படவுள்ளது. மேலும் அகில பாரதிய சந்நியாசிகள் சங்க உறுப்பினர்கள், சுவாமிகள் அனைவருக்கும் குரூப் மெடிக்கல் கிளைம் இன்சூரன்ஸ் திட்டத்தின் கீழ் மருத்துவ காப்பீடு செய்ய வேண்டும் எனவும், தமிழ் மொழி உலக மொழிகளில் மிகப் பழமையான தொன்மையான செம்மொழி என்றும், தமிழகத்தில் கூடுதலாக தமிழ் பல்கலைக்கழகங்கள் உருவாக்க வேண்டும் எனவும் ,இதன் மூலம் தமிழில் தொன்மையை தமிழின் கலாச்சாரம், பண்பாடு உலகறிய செய்ய வேண்டும் என்றும், தமிழகத்தில் உள்ள நதிகளை பாதுகாத்து நதிநீர் மாசு இன்றி மக்களுக்கு குடிநீராகவும் விவசாயத்துக்கு பயன்படுத்த வேண்டும் என்றும், கழிவுநீர்கள் குப்பைகள் இல்லாத நதியாக வணங்கும் தேவதையாக நதிகளை கருத வேண்டும் எனவும் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி நடத்தப்படும் ரதயாத்திரை பாதயாத்திரைகளுக்கு அரசு விரைவாக அனுமதி வழங்க வேண்டும் எனவும் இந்நிகழ்ச்சியில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்நிகழ்ச்சியில் கடந்த 12  நாட்களாக வருகை புரிந்திருந்த ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியானது சேலம் மக்களிடையே நதிகளை பாதுகாக்க வேண்டும் என்ற சிறப்பு வாய்ந்த விழிப்புணர்வை ஏற்படுத்தக்கூடிய விழாவாக திருமணிமுத்தாறு திருவிழா அமைந்திருந்தது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow