சேலத்தில் புதிய அதிமுக மாநகர மாவட்ட கட்சி அலுவலகம் திறப்பு - அதிமுக பொதுச்செயாலளர் எடப்பாடி பழனிச்சாமி பேட்டி

Jul 14, 2025 - 17:49
 14

சேலத்தில் புதிய அதிமுக மாநகர மாவட்ட கட்சி அலுவலகம் திறப்பு - அதிமுக பொதுச்செயாலளர் எடப்பாடி பழனிச்சாமி பேட்டி

எங்களுடைய கவுன்சிலர்களை திமுகவினர் திட்டமிட்டு தாக்கியுள்ளனர் 

சேலம் மாநகராட்சியில் நடைபெறும் குறைகளை எங்களுடைய கவுன்சிலர் யாதவமூர்த்தி தெரிவித்த பொழுது அவரை பேச விடாமல் தாக்கினர் 

40 அடி தூரத்தில் இருந்த பெண் திமுக கவுன்சிலர் எழுந்து வந்து யாதவமூர்த்தியை தாக்கியது திமுக அரசின் அராஜகம் தெரிகிறது என்று பேசினார் 

காவல்துறையில் புகார் தெரிவித்தால் அடிபட்டவர்கள் மீதும் வழக்கு பதிவு செய்வது தான் திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சி 

எங்களின் சுற்றுப்பயணம் மக்களிடம் மிகப்பெரிய வரவேற்பு பெற்றுள்ளது ஆனால் இதை எந்த ஒரு ஊடகமும் வெளிப்படுத்துவதில்லை எங்களுக்கு உறுதுணையாக இருந்து இந்த சுற்றுப்பயணத்தை வெளிப்படுத்தினால் மக்களுக்கு உண்மை தெரியும் 

இந்த ஆட்சியை வீட்டிற்கு அனுப்புவதற்கு ஊடகத்தினர் 
உறுதுணையாக செயல்பட வேண்டும் 

தமிழகத்தில் சட்ட ஒழுங்கு அடியோடு சீர் கெட்டுவிட்டது அனைத்து துறைகளிலும் ஊழல் மலிந்துள்ளது 

இந்த ஆட்சி இருக்கக் கூடாது என்று மக்கள் கொந்தளிப்புடன் இருக்கிறார்கள் அதற்காக என்னுடைய சுற்றுப்பயணத்தை நான் தொடங்கியுள்ளேன் செல்கின்ற இடம் எல்லாம் மக்களுடைய வரவேற்பு எழுச்சியாக உள்ளது 


உங்களுடன் ஸ்டாலின் என்கிற திட்டம் ஒரு வேடிக்கையான திட்டம் 

அவர்கள் விளம்பரம் செய்ய வேண்டும் மக்களை கவர்ச்சிகரமாக ஏமாற்ற வேண்டும் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலை மனதில் வைத்து உங்களுடன் ஸ்டாலின் திட்டம் அறிமுகப்படுத்தி உள்ளது 

அந்த விளம்பரத்தை நிறைய வெளியிட்டுள்ளனர் 

நான்காண்டு காலம் மக்களை சிந்திக்காமல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள தேர்தலை மனதில் வைத்து உங்களுடன் ஸ்டாலின் திட்டம் தொடங்கியுள்ளனர் 


அதில் தொலைபேசி எண்ணை குறிப்பிட்டுள்ளனர் 

அந்த எண் திமுக ஐடி வீங்கிற்கு செல்லும் அவர்கள் அவர்களை தொடர்பு கொண்டு பேசுவார்கள் 

அதிமுக ஆட்சியில் இருந்த பொழுது திமுக தலைவர் ஊர் ஊராக சென்றார் 

அங்கங்கே மனுக்கள் பெற்று என்னென்ன குறைகள் உள்ளது என்பதை மனுவாக பெற்றார் 

இந்தப் பெட்டியில் போடுங்கள் என்று ஸ்டாலின் கூறினார் 

திமுக ஆட்சிக்கு வந்தவுடன் இந்த பெட்டியின் உள்ள மனுக்கள் திறக்கப்பட்டு மனுக்கள் மீதான நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார் 

அவ்வாறு மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தால் 

இவை அனைத்தும் மக்களை ஏமாற்றுவதற்கான ஒரு கபட நாடகம் 

தந்திரமாக மக்களை ஏமாற்றி அவர்களின் கைபேசி எண்ணை பெற்று திமுக ஐடி வீங்கிற்கு வழங்கப்பட்டு அவர்கள் மூலம் பேசுகின்றனர் 

இன்னும் நிறைய கட்சிகள் எங்களுடன் பேசி வருகிறது இன்னும் தேர்தலுக்கு எட்டு மாத காலம் உள்ளது மார்ச் ஏப்ரல் மாதத்தில் தான் தேர்தல் தேதி வெளியாகும் 

பலம் பொருந்திய கூட்டணியாக அதிமுக இந்த முறை தேர்தலை சந்திக்கும் 

எந்த கட்சிகளும் தேர்தல் கூட்டணி குறித்து முடிவு செய்யாத நிலையில் நாங்கள் பாரதிய ஜனதாவுடன் கூட்டணி வைத்துள்ளோம் இன்னும் நிறைய கட்சிகள் வந்து சேரும் வாய்ப்பு அதிகமாக உள்ளது 

அதிமுக தலைமையிலான கூட்டணி வலுவான கூட்டணியாக அமையும் வெற்றி கூட்டணியாக அமையும்

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow