சேலம் நாழிக்கல்பட்டியில் சாதி பெயரை சொல்லி இழிவுபடுத்தி திட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி மனு

Jul 15, 2025 - 09:04
 22
சேலம் நாழிக்கல்பட்டியில் சாதி பெயரை சொல்லி இழிவுபடுத்தி திட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி மனு

சேலம் நாழிக்கல்பட்டியில் சாதி பெயரை சொல்லி இழிவுபடுத்தி திட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி மனு

சேலம் நாழிக்கல்பட்டி கிராமத்தில் அருந்ததியர் சமுதாயத்திற்காக ஒதுக்கப்பட்ட நிலத்தை வன்னியர் மற்றும் கவுண்டர் சமுதாயத்தினர் ஆக்கிரமிப்பு செய்து கோவில் கட்டி வருகின்றனர். அதை தடுக்க கோரியும் மற்றும் சாதி பெயரை சொல்லி இழிவுபடுத்தி திட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி எஸ்சி -  எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய வேண்டி. சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.

எங்கள் காலணியில் சுமார் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். நாங்கள் அன்றாட தின கூலிக்கு வேலைக்கு சென்று பிழைத்து வருகிறோம். தமிழக அரசால் எங்கள் இன மக்களுக்கு கொடுத்த நிலத்தை எங்கள் முன்னோர்களின் வழியாக இன்று வரை பாதுகாத்து வருகிறோம். எங்கள் இன பெண்களின் பாத்ரூம் வசதி கலப்பிடம் மற்றும் சமுதாயக்கூடம் படிக்கின்ற பிள்ளைகள் நூலகம் எதிர்காலத்துக்கு பயன்படும் என்று எண்ணத்தில் நாங்கள் இருக்கும் பொழுது தற்போது மேலே குறிப்பிட்ட நபர்கள் ஆக்கிரமிப்பு செய்து கோவில் கட்டிக்கொண்டு எங்கள் ஜாதி பெயரை சொல்லி கெட்ட வார்த்தையை திட்டி கொலை மிரட்டல் விடுகின்றனர்.

இதை சட்டபூர்வமாக நடவடிக்கை எடுத்து ஜாதி வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் வழக்கு பதிவு செய்து எங்களையும் எங்கள் உரிமையும், உரிமைக்கான நிலங்களை மீட்டு தரும்படி எங்களுக்கு உயிர் பாதிப்பு கொடுக்கும்படி ஊர் சார்பாக பணிவுடன் கேட்டுக்கொள்கிறோம்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow