நகர் புற நல்வாழ்வு மையம் கட்டிடத்தை தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி நேரில் ஆய்வு
நகர் புற நல்வாழ்வு மையம் கட்டிடத்தை தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி நேரில் ஆய்வு
திருச்சியில் 49 வது வார்டு சங்கிலாண்டபுரம் பகுதியில் நகர் புற நல்வாழ்வு மையம் கட்டிடத்தை தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி நேரில் ஆய்வு செய்தார் அப்பொழுது அருகில் கோட்டத் தலைவர் மதிவாணன் ,பகுதி செயலாளர். நீலமேகம், சிவக்குமார் , விஜயகுமார், மாமன்ற உறுப்பினர்கள் லீலா வேலு மற்றும் மருத்துவ செவிலியர்கள் மாநகராட்சியின் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டார்கள்.
இந்நிலையில் இந்த நகர்ப்புற நல்வாழ்வு மையத்தில் ஒரு மருத்துவர் ஒரு செவிலியர் ஒரு ஹெல்த் இன்ஸ்பெக்டர் மற்றும் ஒரு பணியாளர் தினமும் 4 பேர் பணியாற்றி இருப்பார்கள். இந்த நல்வாழ்வு மையம் காலை 8 மணி முதல் மதியம் 12 மணி வரை மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை செயல்படும். அரசு விடுமுறை நாட்கள் இயங்காது. இந்த நல்வாழ்வு மையத்தில் பொது மருத்துவம், கர்ப்பப்பை, வாய் புற்றுநோய் ரத்த பரிசோதனை உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்படுவதாகவும் தெரிவித்தனர்.
What's Your Reaction?



