பெத்தநாயக்கன்பாளையம் வட்டம் ஏத்தாப்பூர் பேரூராட்சி. முத்து மலை முருகன் கோயிலுக்கு பேரூராட்சிக்கு சொந்தமான இடத்தில் சட்டத்திற்கு புறம்பான முறையில் செம்மண் அள்ளுவதை தட்டிக்கேட்ட நபருக்கு அடி உதை
பெத்தநாயக்கன்பாளையம் வட்டம் ஏத்தாப்பூர் பேரூராட்சி. முத்து மலை முருகன் கோயிலுக்கு பேரூராட்சிக்கு சொந்தமான இடத்தில் சட்டத்திற்கு புறம்பான முறையில் செம்மண் அள்ளுவதை தட்டிக்கேட்ட நபருக்கு அடி உதை
சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையம் வட்டம் ஏத்தாப்பூர் பேரூராட்சி. முத்து மலை முருகன் கோயிலுக்கு பேரூராட்சி இடத்திற்கு சொந்தமான இடத்தில் சட்டத்திற்கு புறம்பான முறையில் செம்மண் அள்ளிக் கொண்டு இருந்தார்கள் இது தொடர்பாக பெத்தநாயக்கன்பாளையம் வட்டாச்சியர் அவர்களுக்கு போன் மூலம் தகவல் தெரிவித்து விட்டு ஜே. சி.பி மற்றும் டிப்பர் லாரியை போட்டோ மற்றும் வீடியோ எடுத்து கொண்டு இருந்தேன். அப்போது கிராம நிர்வாக அலுவலரின் உதவியாளர் அங்கே வந்தார் அவரிடம் அனுமதி வாங்கி மண் அள்ளிக்கொண்டிருக்கிறார்களா என்று கேட்டுக் கொண்டிருந்த போது அங்கு வந்த.கிட்டு (எ)மணிகண்டன் என்னை பார்த்து தகாத வார்த்தையில் மனம் நோகும் படி திட்டினார்.ஒழுங்கா வீட்டுக்கு போயிடு இல்லன்னா பாரு ஜேசிபி இங்க இருக்கு இங்கே குழி தோண்டி புதைத்து விடுவேன் என்று கொலை மிரட்டல் விட்டார்.அதன் பிறகு என்னை கழுத்தில் உதைத்தார். என்னை அடித்தார் நான் அவரை ஜாதியைப் பற்றி திட்டியதாக அவர் சித்தரித்து காவல் நிலையத்தில் நான் சொல்லாத வார்த்தையை சொன்னதாக பொய் புகார் கொடுத்துள்ளார் பிறகு நான் பெத்தநாயக்கன்பாளையம் அரசு மருத்துவமனையில் உள் நோயாளியாக சேர்க்கப்பட்டேன். மருத்துவர் பரிசோதித்து எனக்கு காதில் உள்ள ஜவ்வு கிழிந்து விட்டதாகவும் கூறினார். அதன் பிறகு நான் ஒரு ஓட்டலில் சாப்பிட்டுக் கொண்டிருந்த பொழுது அங்கு வந்த .
தலைவர் அன்பழகன் என்னை நோக்கி அடிக்க பாய்ந்தார் நீ இந்த ஊர்ல வாழ்ந்துருவியா நீ எப்படி வாழ்கிறாய் என்று நான் பார்க்கிறேன் என்று கொலை மிரட்டல் விடுத்து விட்டு சென்றார் அதையும் காவல் நிலையத்தில் புகாராக அளித்துள்ளேன்.மணிகண்டன் மீதும் அன்பழகன் மீதும் .உரிய நடவடிக்கை எடுத்து. அரசு அனுமதி வாங்காமல் .மணல் அள்ளிய டிப்பர் லாரியையும் ஜேசிபி வாகனத்தையும் பறிமுதல் செய்து அனைவர் மீதும் உரிய நடவடிக்கை எடுக்குமாறு பாதிக்கப்பட்ட நபர் புகார் கொடுத்துள்ளதாக கூறினார்.
What's Your Reaction?



