ஸ்ரீ சக்தி கைலாஷ் மகளிர் கல்லூரியில் பொங்கல் விழா
ஸ்ரீ சக்தி கைலாஷ் மகளிர் கல்லூரியில் பொங்கல் விழா
சேலம் பொன்னம்மாபேட்டைஅருகில் அமைந்துள்ள ஸ்ரீ சக்தி கைலாஷ் மகளிர் கல்லூரியில் மகளிர் ஆட்டம் பாட்டத்துடன் பானை வைத்து கரும்பு தோரணங்கள் கட்டி பொங்கல் விழா மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டதுதமிழர்களின் திருநாளாம் தை திருநாள் பாரம்பரியமாக இந்த திருநாள்முக்கிய திருவிழாவாக தமிழகத்தில் கொண்டாடப்பட்டு வருகின்றது. அவற்றில் முக்கியமானது "பொங்கல் பண்டிகையாகும்" நமக்கு விளைச்சலைக் கொடுத்த நிலத்திற்கும். நிலத்தில் உழைத்துக் களைத்த கால்நடைகளுக்கும் விளைச்சல் பெருக உதவிய இயற்கைக்கும் நன்றி தெரிவிக்கும் விதமாக தமிழர்கள் காலம் காலமாக தைத்திருநாளை சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். போகியில் தொடங்கும் பொங்கல் திருநாள் 4 நாட்கள் போகி அன்று பழைய பொருட்களை தீயிட்டு கொளுத்துவதின் நோக்கம் நம் மனதில் தீய எண்ணங்கள் மறைந்து நல்ல எண்ணம் வளர வேண்டும் என்பதே ஆகும்.
இவ்வாறு தமிழர்களால் கொண்டாடப்படுகின்ற தமிழர்களின் கொண்டாட்டத்திற்கு காரணமான தை திருநாளை ஸ்ரீ சக்தி கைலாஷ் கல்லூரி மாணவியர் கோலாகலமாக கொண்டாடினர்.
இந்நிகழ்ச்சியில் ஏ.வி.எஸ் மற்றும் சக்தி கைலாஷ் கல்வி நிறுவனங்களின் தலைவர் க.கைலாசம் தலைமை தாங்கினார். செயலாளர் கை. இராஜவிநாயகம் கல்லூரியின் தாளாளர் கை. செந்தில்குமார் ஆகியோர், முன்னிலை வகித்தனர். ஸ்ரீ சக்தி கைலாஷ் மகளிர் கல்லூரியின் முதல்வர் முனைவர். சொ. ஜெயந்திவரவேற்புரை வழங்கினார். மேலும் முனைவர் வி. ராதா சதீஷ், எஸ். அனுராதா, எஸ். புஷ்பலதா எஸ். கிருஷ்ணப்பிரியா ஆகியோரும் விழாவில் பங்கேற்றனர்.
மாணவிகள் அனைவரும் பாரம்பரிய உடையான புடவை, பாவாடை தாவணி அணிந்து வந்திருந்தனர். மாணவிகள் அனைவரும் ஒன்றிணைந்து பொங்கல் வைத்து விழாக்களை சிறப்பாக மகிழ்ச்சியுடன் கொண்டாடி மகிழ்ந்தனர்இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கல்லூரி நிர்வாகத்தினர் மற்றும் பேராசிரியர்கள் இணைந்து மிகச் சிறப்பாக செய்திருந்தனர்
What's Your Reaction?