12 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக நீர் தேக்க தொட்டி பூமி பூஜை
வீரபாண்டி சட்டமன்ற உறுப்பினர் ராஜா முத்து அவர்களின் தொகுதி மேம்பாட்டு நிதியில் 12 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக நீர் தேக்க தொட்டி பூமி பூஜை போடப்பட்டது
வீரபாண்டி சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் 12 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக நீர் தேக்க தொட்டி வீரபாண்டி ஒன்றியம் உத்தமசோழபுரம் ஊராட்சி,சூளைமேடு அணை கவுண்டன் தெருவில் 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட நீர் தேக்க தொட்டி அமைக்க பூமி பூஜை போடப்பட்டது.அதிமுக முன்னாள் முதல்வர் தமிழக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி அவர்களின் ஆணைக்கிணங்க தமிழ்நாடு கூட்டுறவு வங்கி மாநிலத் தலைவரும் புறநகர் மாவட்ட கழகச் செயலாளருமான இளங்கோவன் அவர்களின் வழிகாட்டுதலின் படியும் வீரபாண்டி சட்டமன்ற உறுப்பினர் ராஜா முத்து அவர்கள் தலைமையில் பூமி பூஜை போடப்பட்டது.மேலும் இந்நிகழ்வில் வீரபாண்டி மேற்கு ஒன்றிய கழகச் செயலாளரும் வீரபாண்டி ஒன்றிய குழு பெருந்தலைவர் வருதராஜ், வீரபாண்டி கிழக்கு ஒன்றிய செயலாளரும் வீரபாண்டி ஒன்றிய குழு துணை தலைவர் வெங்கடேசன்,வீரபாண்டி கிழக்கு ஒன்றிய அம்மா பேரவை செயலாளரும் உத்தமசோழபுரம் ஊராட்சி மன்ற தலைவர் பி.வி.பெருமாள், பாரத ரத்னா எம்.ஜி.ஆர் பட்டு சொசைட்டி தலைவர் ஜெகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.மற்றும் ராஜேந்திரன்,பால மணிகண்டன், மகேந்திரன்,ஆனந்த கோபி, ஜெயபிரகாஷ்,முருகேசன்,சேட்டு, சாந்தி,பாலசுப்ரமணியம், கிளைச் செயலாளர்கள் மாதேஸ்வரன்,முருகேசன், பழனிசாமி,தனபால்,மணி, சுப்பிரமணி,கோவிந்தசாமி, சுப்பிரமணியம்,கருப்பண்ணன்,
ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
What's Your Reaction?



