108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் சங்கம் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு 

Feb 9, 2026 - 15:09
 11
108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் சங்கம் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு 

108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் சங்கம் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு 

சேலம் மாவட்டம் 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர் சங்கத்தின் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் கொடுக்கப்பட்ட புகார் மனுவில் குறிப்பிட்டிருந்ததாவது, 

108 ஆம்புலன்ஸ் சேவையில் தமிழகம் முழுவதும் இரவு பகல் என 12 மணி நேரம் சுழற்சி அடிப்படையில் அவசரகால மருத்துவ உறுப்பினர் மற்றும் ஓட்டுநர், கால் சென்டர் தொழிலாளர் ஆகியோர் 700க்கும் மேற்பட்ட பணியாளர்கள் பணியாற்றி கொண்டிருப்பதாகவும், சட்டவிரோதமான 12 மணி நேர மணி நேரம் என்ற அடிப்படையில் உயிர் காக்கும் உன்னத பணியை குறைந்த ஊதியத்தில் மனதிற்கு நிறைவாக உயிர் காக்கும் உன்னத பணி என தாங்கள் உழைத்து வருகின்றோம் எனவும் ,சேலம் மாவட்டத்தில் 57 ஆம்புலன்ஸ்கள் இயக்கப்படுவதாகும் அதில் 300 ஆண் பெண் தொழிலாளர்கள் வேலை பார்த்து வருவதாகவும் குறிப்பிட்டிருந்தனர். தாங்கள் பணிபுரிந்த ஜனவரி மாதத்திற்கான ஊதியம் இதுவரை TNHSP மற்றும்EMRI-GHS நிர்வாகத்தால் தங்களுக்கு வழங்கப்படவில்லை என்றும், ஜனவரி மாதம் நிலுவை ஊதியத்தை உடனடியாக வழங்கிடவும் ,
இனிவரும் காலங்களில் ஒவ்வொரு மாதமும் இது நாள் வரையில் நடைமுறையில் இருந்தது போல் ஒன்றாம் தேதி ஊதியம் வழங்கப்படுவதை உறுதி செய்து விட வேண்டும் எனவும், திமுக ஆட்சி பொறுப்பேற்ற நாளிலிருந்து 108 ஆம்புலன்ஸ் சேவையை முடக்குவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது .எனவே 108 ஆம்புலன்ஸ்  சேவையின் முதுகிரமாக இருக்கக்கூடிய தொழிலாளர்களின் சம்பளத்தை குறைத்து வழங்குவதன் மூலம் அவர்களாகவே சேவையை  விட்டு வெளியேறும் நிலையை உருவாக்கியது, அதை எதிர்த்து தொடர்ந்து தங்களது தொழிற்சங்கம் போராடிக் கொண்டிருந்தால் தற்போது மாதாந்திர சம்பளத்தையும் நிறுத்தி உள்ளது. எனவே இந்த செயல் முழுக்க முழுக்க மக்கள் விரோத நடவடிக்கையாகவும் திமுக, பாஜக ஆகிய கட்சிகளை தவிர மற்ற மக்கள் நலனில் அக்கறை உள்ள அரசியல் கட்சிகளோடும் சமூக மாற்று சக்திகளுடன் இணைந்து தமிழக உழைக்கும் மக்களை அணி திரட்டி தமிழக அரசு பொது சுகாதாரத்துறை படிப்படியாக சீரழித்து தமிழக மக்களை தனியார் மருத்துவமனை நோக்கி தள்ளும் இந்த நிலையை அம்பலப்படுத்தி அனைத்து மாவட்டங்களிலும் போராட்டங்கள் முன்னெடுப்பது என்று முடிவு செய்ததாகவும், அப்படி தீர்வு கிடைக்கவில்லை என்றால் தொடர்ந்து போராட்டங்கள் நடைபெறும் எனவும் தங்கள் மனுவில் குறிப்பிட்டிருந்தனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow