கோழி பண்ணைகளால் நோய் தொற்று ஏற்படும் அபாயம்?
கோழி பண்ணைகளால் நோய் தொற்று ஏற்படும் அபாயம்?
மாவட்டம் ஓமலூர் வட்டம் பச்சனம்பட்டி கிராமத்தில் வசித்து வரும் கீதா என்பவர் மாவட்ட ஆட்சியாளரிடம் மனு அளித்தார். கிருஷ்ணன் செல்வகணபதி ஆகியோர் கோழிகளை வளர்த்து விற்கும் தொழில் செய்து வருகின்றனர். அவர்கள் அமைத்திருக்கும் கோழி செட்டுகளில் கோழி வளர்ப்பதால் ஈக்களும் கொசுக்களும் அதிக அளவில் உள்ளன.இதனால் துர்நாற்றம் வீசுகிறது
மேற்படி அருகில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் குழந்தைகள் மற்றும் கர்ப்பிணி பெண்கள் உள்ளனர் ஈக்கள் மற்றும் கொசுவினால் வயிற்றுப்போக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெரும் நிலையை உள்ளது குழந்தைகள் கடும் வியாதிகளால் பாதிக்கப்பட்டு உயிருக்கு ஆபத்து ஏற்படும் நிலை உள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் வாழ முடியாமல் அவதியுற்று வருகின்றனர். ஆகவே கோழிப் பண்ணைகளை ஆய்வு செய்து சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் பொருட்டு கோழிப்பண்ணைகளை முழுவதும் அகற்றி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறார்கள்
What's Your Reaction?



