அருள்மிகு ஸ்ரீபெரிய மாரியம்மன் திருக்கோவில் மகா கும்பாபிஷேக திருவிழா

Feb 8, 2026 - 15:33
 16
அருள்மிகு ஸ்ரீபெரிய மாரியம்மன் திருக்கோவில் மகா கும்பாபிஷேக திருவிழா

அருள்மிகு ஸ்ரீபெரிய மாரியம்மன் திருக்கோவில் மகா கும்பாபிஷேக திருவிழா

சேலம் மாவட்டம் தப்பகுட்டை , அய்யனூர் கிராமத்தில் எழுந்தருளியிருக்கும் அருள்மிகு ஸ்ரீபெரிய மாரியம்மன் திருக்கோவில் மகா கும்பாபிஷேக திருவிழா வெகு சிறப்பாக நடைபெற்றது. விழாவின் துவக்கமாக முகூர்த்த கால் நடுதல் மற்றும் யாக பூஜைகள், தீர்த்தக்குட ஊர்வலம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணிக்கு மேல் பத்து முப்பது மணிக்குள் கோவிலின் கோபுர கலசத்தின் மீது புனித நீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேக விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர். விழாவில் கலந்துகொண்ட பக்தர்கள் அனைவருக்கும் சிறப்பு அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow