மஹா கும்பாபிஷேக விழா

Feb 8, 2026 - 14:58
 9
மஹா கும்பாபிஷேக விழா

மஹா கும்பாபிஷேக விழா

சேலம் மாவட்டம் அன்னதானப்பட்டி கண்ணகி தெரு ,புதிய காலனியில் எழுந்தருளியிருக்கும் செல்வவிநாயகர் ,சக்தி மாரியம்மன் மதுரைவீரன், வெள்ளையம்மாள் பொன்னியம்மன் மற்றும் பரிகார தெய்வங்களின் ஆலய மகா கும்பாபிஷேக விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. விழாவின் துவக்கமாக கடந்த வெள்ளிக்கிழமை செவ்வாபேட்டை காளியம்மன் ஆலயத்திலிருந்து தீர்த்தக்குடம் கொண்டு வந்து அபிஷேகம் செய்யப்பட்டு மறுநாள் வேள்வி பூஜை , கோபுர தரிசனம் யாக பூஜைகள் நடைபெற்றதை தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் ஆலயத்தின் கோபுர கலசத்தின் மீது தண்ணீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் அபிஷேக பூஜைகள் நடைபெற்றது. வருகை புரிந்திருந்த அனைத்து பக்தர்களுக்கும் சிறப்பு அன்னதானம் வழங்கப்பட்டது. கும்பாபிஷேக விழாவில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு வழிபட்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow