சமூக வலைத்தளங்களுக்கு சென்சார் கட்டுப்பாடு கட்டாயம் வேண்டும் நடிகர் ரஞ்சித் ஆவேச பேட்டி
ஜனநாயகம் திரைப்படம் குறித்த கேள்விக்கு அரசியலுக்கு சென்று விட்டால் அவர்களின் திரைப்படம் பெரும் வரவேற்பை யாரும் கொடுக்க மாட்டார்கள் எதிர்ப்புதான் தெரிவிப்பார்கள் என்று நடிகர் ரஞ்சித் பரபரப்பு
பேட்டி ....
சமூக வலைத்தளங்களுக்கு சென்சார் கட்டுப்பாடு கட்டாயம் வேண்டும் நடிகர் ரஞ்சித் ஆவேச பேட்டி
சமூக வலைத்தளங்களில் லைக் வாங்குவதற்காக விவசாய பாடலுக்கு கூட நிலா காயுது என்ற ஆபாச பாடலை போட்டு பதிவேற்றம் செய்கின்றனர் நடிகர் ரஞ்சித் பரபரப்பு குற்றச்சாட்டு. சேலத்தில் கொங்கு நண்பர்கள் சங்கத்தின் 6வது குடும்ப விழா சேலம் நெய்க்காரப்பட்டி பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது இதில் சேலம் மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் நிர்வாகிகள் மற்றும்தொழில்துறையினர் கலந்து கொண்டனர் இதில் சிறப்பு அழைப்பாளராக திரைப்பட நடிகர் இயக்குனர் ரஞ்சித் கலந்து கொண்டு வள்ளி கும்மி ஆட்டத்திற்கு நடனமாடி அசத்திய பெண்களுக்கு பரிசுகள் வழங்கி கௌரவித்தார்.
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த
நடிகர் ரஞ்சித் கூறுகையில்
கலாச்சாரம் பண்பாடு இவற்றையெல்லாம் இன்றைய தலைமுறைக்கு கொண்டு செல்வதற்காக இது போன்ற குடும்ப விழா அனைத்து பகுதிகளிலும் கட்டாயம் நடத்த வேண்டும்
சமூக வலைத்தளங்கள் பார்க்காதவர்கள் யாரும் இல்லை போன் இல்லாதவர்கள் டெட்பாடிக்கு சமமானவர்கள்
அதே நேரத்தில் சமூக வலைத்தளம் பெரிய ஆபத்தாகவும் உள்ளது
ஒரு நிகழ்ச்சிக்கு பெண் குழந்தைகள் பெண்கள் நடனம் ஆடுகின்ற பொழுது அதனை மொபைல் போன் மூலம் வீடியோ எடுத்து அவர்கள் நல்ல பாடலுக்கு விவசாயம் சார்ந்த பாடலுக்கு நடனம் ஆடுவார்கள் ஆனால் வீடியோ எடுப்பவர்கள் சமூக வலைத்தளங்களில் லைக் வாங்க வேண்டும் என்பதற்காகவே நிலா காயுது நேரம் நல்ல நேரம் என்ற ஆபாச பாடல்களையும் பதிவேற்றம் செய்து லைக் வாங்குகிறார்கள் வியாபாரத்திற்காக காமம் நிறைந்த பாடலை இது போன்று பதிவிடுவதை பல லட்சம் பேர் பார்க்கின்றனர் அந்த பெண் வெளியில் செல்கின்ற பொழுது பெரும் அளவில் பாதிக்கப்படுகிறாள் நல்ல தகவலை பரப்புவதற்கு யாரும் கிடையாது ஒரு பதிவு போட்டால் அதற்கு காசு தருகிறேன் என்ற நடைமுறை யூடிபில் வந்ததும் அது மிகப்பெரிய ஆபத்தை நோக்கி செல்கிறது சமூக வலைதளங்களுக்கு சென்சார் கட்டுப்பாடு முக்கியம் என்றார்
இயக்குனர் சுரேஷ் காமாட்சி தெரிவித்த கருத்து 70% உண்மை தமிழகத்தில் பெரும்பாலான திரைப்படங்களுக்கு திரையரங்கு கிடைப்பது இல்லை குறிப்பாக சிறிய படங்களுக்கு திரையரங்குகளில் கிடைப்பதில்லை இங்கு போராளிக்கு இடமே கிடையாது வருடத்திற்கு 200 படம் ரிலீஸ் ஆகிறது மூன்று படம் தான் ஹிட் ஆகிறது தயாரிப்பாளர்கள் பலரும் போராடி வருகின்றனர் அதிக வரி செலுத்தும் துறை சினிமா துறை என்றார்
சினிமா தயாரிப்பாளர் சங்கம் தேர்தல் இந்த ஆண்டு நடைபெற உள்ளது இப்பொழுது ஒரு கோரிக்கையாகவே வைக்கிறேன் யார் தயாரிப்பாளர் சங்கத்தில் வெற்றி பெற்றாலும் சிறிய படங்கள் பெட்டிக்குள் காத்திருக்கிறது இதனை வெளிக்கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும்
நடிகர்விஜயன் ஜனநாயகம் திரைப்பட குறித்த கேள்விக்கு அது எனக்கு தெரியவில்லை அரசியலுக்கு சென்று விட்டார் அரசியல் சென்று விட்டால் ஒரு படம் ரிலீஸ் ஆகின்ற பொழுது பூமழை தூவி யாரும் வரவேற்க மாட்டார்கள்அரசியல் போட்டியில் அப்படித்தான் இருக்கும் என்றார்.
What's Your Reaction?



