சேலத்தில் புரட்சிகர சோசலிஸ்ட் கட்சியின் மாநில அளவிலான அரசியல் பயிலரங்கம்
சேலத்தில் புரட்சிகர சோசலிஸ்ட் கட்சியின் மாநில அளவிலான அரசியல் பயிலரங்கம்
தேசிய தலைவர்கள் முன்னாள் அமைச்சர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்பு.
மோடி அரசின் ஆட்சியில் விவசாயிகள் வாழ்வாதாரம் இன்றி அழியும் சூழல் உருவாகி வருகிறது அகில இந்திய பொது செயலாளர் மனோ ஸ்பட்டாச்சர்யா பேட்டி
புரட்சிகர சோசியலிஸ்ட் கட்சியின் அரசியல் பயிலரங்கம் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில்
ஒவ்வொரு பகுதிகளிலும் நடத்தப்பட்டு வருகிறது
அதன் ஒரு பகுதியாக சேலம் புதிய பேருந்து நிலையம் பகுதியில் உள்ள தனியார் விடுதியில் புரட்சிகர சோசியலிஸ்ட் கட்சியின் மாநில அளவிலான அரசியல் பயிலரங்கம் நடைபெற்றது இதில் கேரள முன்னாள் தொழில்துறை அமைச்சர் பாபு திவாகரன்
ஆர் எஸ் பி கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் ஜீவானந்தம் மற்றும் அகில இந்திய பொதுச் செயலாளர் மனோ ஸ்பட்டாச்சர்யா உள்ளிட்டோர் கலந்து கொண்டு தமிழ்நாட்டில் தற்பொழுது உள்ள அரசியல் சூழல்கள் மற்றும் மத்திய பாஜக அரசின் ஆட்சியில் மக்கள் படும் வேதனைகள் குறித்தும் பேசினார்
பாரதிய ஜனதா கட்சி மக்கள் விரோத ஆட்சியை நடத்தி வருகிறது மோடி அவர்கள் மீடியாவை கையில் வைத்துக் கொண்டுதன்னை பிரபலம் செய்து கொள்வதற்காகவே ஒவ்வொரு வேலையும் செய்து வருகிறார் விளம்பரம் தேடிக் கொள்கிறார் விவசாயிகள் பல நாட்களாக உற்பத்தி பொருளுக்கு உரிய விலை வேண்டும் என்று போராடி வருகின்றனர் இதனை எல்லாம் மத்திய அரசு எந்த ஒரு கவனத்திலும் கொள்ளவில்லை அதேபோல ஆபரேஷன் சித்தூர் என்று இந்த வெற்றி மோடி அவர்களின் வெற்றி என்று பேசி வருகிறார் ஆனால் இந்த திட்டம் மிகவும் தோல்வியடைந்த திட்டம் மக்களை ஏமாற்றி வருகிறார் பிரதமர் மோடி என்று பேசினார் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தோர் ஏழை எளிய மக்கள் என பல தரப்பு மக்களுமே இந்த மோடி ஆட்சியில் பாதிக்கப்பட்டு வருகின்றனர் என்று பேசினார்.
What's Your Reaction?



