புகார் மனு கொடுக்க வந்தவர் மீது வழக்கு பதிவு செய்து விடுவேன் என மிரட்டும் காவல்துறை
புகார் மனு கொடுக்க வந்தவர் மீது வழக்கு பதிவு செய்து விடுவேன் என மிரட்டும் காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி காவல் ஆணையாளர் அலுவலகத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மனு ...
நூற்றுக்கும் மேற்பட்டோர் ஆணையாளர் அலுவலகத்தில் திரண்டதால் பரபரப்பு...
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநகர மாவட்ட துணை செயலாளர் காயத்ரி ஏற்பாட்டில் மாநகரின் பல்வேறு பகுதிகளில் விளம்பரம் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மகளிர் மாநாடு திருவண்ணாமலையில் வருகின்ற 19ஆம் தேதி நடைபெற உள்ளது இதனையும் விளம்பரப்படுத்தும் நோக்கில் பல்வேறு பகுதிகளில் சுவர் விளம்பரங்கள் எழுதப்பட்டு பதாகைகள் வைக்கப்பட்டு வருகிறது
இந்த நிலையில் கடந்த சில தினங்களாகவே விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சுவர் விளம்பரங்கள் மற்றும் தலைவரின் படங்களை சமூக விரோதிகள் சேதப்படுத்தியும் அதனை அவமதித்தும் விளம்பர பதவிகளை அகற்றியும் வருகின்றனர் இது குறித்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி விடுதலை சிறுத்தைகள் கட்சியின் இளைஞர் அணி மாவட்ட துணை அமைப்பாளர் சார்பில் கடந்த 20 ஆம் தேதி காவல் ஆணையாளர் அலுவலகத்தில் மனு வழங்கினர்
இந்த மனு மீது சேலம் அம்மாபேட்டை காவல் துறையினர் எந்த ஒரு நடவடிக்கையும் விசாரணையும் மேற்கொள்ளாமல் புகார் கொடுத்தவர்கள் மீது மிரட்டும் தோணியிலும் அச்சுறுத்தும் வகையிலும் பேசியதாக கூறப்படுகிறது
இந்த நிலையில் இன்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில துணை செயலாளர்
பாவேந்தன் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் காவல் ஆணையாளர் அலுவலகத்தில் மிரட்டும் காவல் துறையினர் மீது நடவடிக்கை எடுத்து திருமாவளவன் அவர்கள் படத்தை அவமதித்தும்
சுவர் விளம்பரங்களை அளித்தவர்களை கண்டுபிடித்து தண்டனை வழங்கும்படி மனு வழங்கினர்.
What's Your Reaction?



