கோயில் நிலங்களை ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு

Feb 26, 2025 - 10:16
Feb 26, 2025 - 10:17
 12
கோயில் நிலங்களை ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு

கோவில் நிலங்களை ஆக்கிரமித்தவர்கள் மீது சேலம் மாவட்ட ஆட்சியரிடம் பொதுமக்கள் புகார் சேலம், பிப். 25 சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே உள்ள இடங்கணசாலை பெரிய மாரியம்மன் கோவில் அறங்காவலர் குழு தலைவர் மாணிக்கம் மற்றும் அறங்காவலர் குழு உறுப்பினர்கள், ஊர் பொதுமக்கள் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: சேலம் இடங்கணசாலையில் உள்ள பெரிய மாரியம்மன் கோவில் மற்றும் கோட்டை விநாயகர் திருக்கோவில் இந்து சமய அறநிலையத்துறை காட்டுப்பாட்டின் கீழ் இருந்த நிலங்களை சில தனி நபர்கள் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். இந்த ஆக்கிரமிப்பை மீட்டு மீண்டும் கோவில் பெயருக்கு பட்டா மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் காலதாமதம் ஆகும் பட்சத்தில் இடங்கணசாலை கிராம நிர்வாக அலுவலகம் அருகில் சாலை மறியல் செய்யவது என இடங்கணசாலை ஊர் பொதுமக்கள் ஆகிய நாங்கள் இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு அவர்கள் அந்த மனுவில் தெரிவித்துள்ளனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow