சேலத்தில் ரூ.5 லட்சம் கடன் தொகைக்கு ரூ.12 லட்சம் வரை பணத்தை பெற்றுக் கொண்டு கடன் ஆவணங்களை திருப்பி தராமல் கொலை மிரட்டல் விடுக்கும் நபர் மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரி பாதிக்கப்பட்ட பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்

Feb 19, 2025 - 08:43
 27
சேலத்தில் ரூ.5 லட்சம் கடன் தொகைக்கு ரூ.12 லட்சம் வரை பணத்தை பெற்றுக் கொண்டு கடன் ஆவணங்களை திருப்பி தராமல் கொலை மிரட்டல் விடுக்கும் நபர் மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரி பாதிக்கப்பட்ட பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்

சேலத்தில் ரூ.5 லட்சம் கடன் தொகைக்கு ரூ.12 லட்சம் வரை பணத்தை பெற்றுக் கொண்டு கடன் ஆவணங்களை திருப்பி தராமல் கொலை மிரட்டல் விடுக்கும் நபர் மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரி பாதிக்கப்பட்ட பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

சேலம் கிச்சிபாளையம் பச்சப்பட்டி மாரியம்மன் கோயில் தெரு பகுதியைச் சேர்ந்த செல்வம், அருணாராணி தம்பதியினர் கடந்த 2020 ஆம் ஆண்டு குழந்தைகளின் கல்வி செலவிற்காக பச்சப்பட்டி கோயில் கமிட்டி நிதியிலிருந்து ரூ.5 லட்சம் கடன் பெற்றுள்ளனர். தொடர்ந்து கோயில் கமிட்டி நிர்வாகி சின்னதுரையிடம் கடந்த 4 ஆண்டுகளில் ரூ.12 லட்சம் வரை பணம் கொடுத்துள்ளனர். இந்த நிலையில் கடந்த 14ஆம் தேதி தன்னுடைய கடன் ஆவணங்களை திருப்பி தருமாறு அருணாராணி கேட்டபோது சின்னதுரை அவரை கடுமையாக தாக்கி கோயில் வளாகத்தில் அடைத்து வைத்து கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. மேலும் அவரது குடும்பத்தினரை ஊரை விட்டு விலக்கி வைத்து ஊர் மக்கள் யாரும் இந்த குடும்பத்தினருடன் பேசக்கூடாது என அறிவித்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் அருணா ராணி அவரது குடும்பத்தினர் ராஷ்டிரிய லோக் தல் கட்சி நிர்வாகிகள் மூலம் சின்னதுரை மீது பெண்களுக்கு எதிரான வன்கொடுமை சட்டத்தின் கீழும், சமூக புறக்கணிப்பு சட்டத்தின் கீழும், கந்து வட்டி வசூலித்ததாக பொருளாதார விதி மீறல் கீழும் வழக்கு பதிவு செய்து கைது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி கிச்சிபாளையம் காவல் நிலையம், அனைத்து மகளிர் காவல் நிலையம், சேலம் மாநகர காவல் ஆணையாளர் அலுவலகம், பொருளாதார குற்றவியல் பிரிவு அதிகாரியிடம் புகார் அளித்துள்ளனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow