சேலம் பட்டு வளர்ச்சி துறை உதவி இயக்குனர் அலுவலக வளாகத்தில் புதிதாக நிறுவப்பட்ட இரண்டு பல்முனை பட்டு முற்பகம் மற்றும் பட்டு முறுக்கேற்றும் இயந்திரம் ஆகியவற்றினை உற்பத்தி பணிகள் பட்டு வளர்ச்சித் துறை இயக்குனர் சாந்தி தொடங்கி வைத்தார்

Oct 9, 2025 - 13:29
 134
சேலம் பட்டு வளர்ச்சி துறை உதவி இயக்குனர் அலுவலக வளாகத்தில் புதிதாக நிறுவப்பட்ட இரண்டு பல்முனை பட்டு முற்பகம் மற்றும் பட்டு முறுக்கேற்றும் இயந்திரம் ஆகியவற்றினை உற்பத்தி பணிகள் பட்டு வளர்ச்சித் துறை இயக்குனர் சாந்தி தொடங்கி வைத்தார்

சேலம் பட்டு வளர்ச்சி துறை உதவி இயக்குனர் அலுவலக வளாகத்தில் 52.52 லட்சம் மதிப்பில் புதிதாக நிறுவப்பட்ட இரண்டு பல்முனை பட்டு நுட்பம் மற்றும் ஒரு பட்டு முறுக்கேற்றும் அலகு ஆகியவற்றில் உற்பத்தி பணி துவக்கம்

சேலம் பட்டு வளர்ச்சி துறை உதவி இயக்குனர் அலுவலக வளாகத்தில் புதிதாக நிறுவப்பட்ட இரண்டு பல்முனை பட்டு முற்பகம் மற்றும் பட்டு முறுக்கேற்றும் இயந்திரம் ஆகியவற்றினை உற்பத்தி பணிகள் பட்டு வளர்ச்சித் துறை இயக்குனர் சாந்தி தொடங்கி வைத்தார்.

 குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் அவர்களால் 2023-24 ஆம் ஆண்டு சட்டமன்ற கூட்டத்தொடரில் வெளியிடப்பட்ட அறிவிப்பினை நிறைவேற்றும் விதமாக சேலம் அணைமேடு பகுதியில் இயங்கி வரும் சேலம் பட்டு வளர்ச்சி துறை உதவி இயக்குனர் அலுவலக வளாகத்தில் 52.52 லட்சம் மதிப்பில் புதிதாக நிறுவப்பட்ட இரண்டு பல்முனை பட்டு நுட்பம் மற்றும் ஒரு பட்டு முறுக்கேற்றும் அலகு ஆகியவற்றில் உற்பத்தி பணிகளை பட்டு வளர்ச்சித் துறை இயக்குனர் சாந்தி தொடங்கி வைத்தார்.

 புதிதாக நிறுவப்பட்ட அரசு அலககுகளின் உற்பத்தி பணிகளுக்காக சேலம் சுற்றுவட்டார பகுதியில் இருந்து 40 பணியாளர்களுக்கு பயிற்சியுடன் கூடிய வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மேலும் 10 நுட்பு அலகிக்கு தேவையான எரிபொருள் சேர்ப்பு கட்டடம் ரூபாய் 1.50 லட்சம் மதிப்பிலும் மின் மராமத்து பணிகள் ரூபாய் 3.25 லட்சம் மதிப்பிலும் நீர் வடிகால் பணிகள் ரூபாய் 5.61 லட்சம் மதிப்பிலும் மாநில அரசின் நிதியில் இருந்து மேற்கொள்ளப்பட்டுள்ளது .
இந்த தொடக்க விழாவில் சேலம் பட்டு வளர்ச்சி துறை இணை இயக்குனர் சந்திரசேகரன், சேலம் பட்டு வளர்ச்சி துறை உதவி இயக்குனர் பொன்மாரி மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow